ரேபான் புதுமையான கண்ணாடிகளை உருவாக்குவதற்கு பெயர்பெற்ற பிராண்டாக இருந்து வருகிறது. இன்றும், புதுமையை நாடும் அதன் தாகத்தின் வெளிப்பாடாக ஒளிக்கேற்ப மாறும் ஃபிரேமுடன் ரேபான் சேஞ்ச் கண்ணாடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ட்ரான்சிஷன்ஸ் பிராண்டுடன் சேர்ந்து வருகிறது. ஃபிரேம் வெளிப்படும் ஒளிச் சூழலுக்கு ஏற்ப மாறும் விதமாக ரேபான் சேஞ்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது புற ஊதா ஒளிக்கு வெளிப்படும் போது இந்த ஃபிரேம்கள் அவற்றின் நிறத்தினை மாற்றிக்கொள்வதால், வசிப்பிடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நீங்கள் சென்று வரும்போது நிறம் மாறி உங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.
இது வேபேரர் ஓவல் கண்ணாடிகள் சன் மற்றும் ஆப்டிகல் ஸ்டைல்களில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பிக்மென்ட்களுடன் கிடைக்கின்றன. ரேபான் கலெக்ஷன்களின் விலை ரூபாய் 12,490/- முதல் தொடங்குகிறது. இது முன்னணி ஆப்டிகல் கடைகள் மற்றும் ரேபான் இணையதளத்தில் கிடைக்கும்.
எட்டு விதமான பிரத்யேக வண்ணங்களில் இந்த லென்ஸ்கள் கிடைக்கின்றன. எந்த விதமான ஒளியிலும் பிரகாசமான நிறங்களை வழங்கும் விதமாக சீரமைக்கப்பட்ட இந்த வண்ணங்கள் - அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பொருத்தமானதாக இருக்கும். வசிப்பிடங்களின் உள்ளே முற்றிலும் தெளிவாக தோற்றமளிக்கும் இவை, வெளியே சென்றவுடன் அழகான நிறங்களுக்கு மாறுகின்றன. எனவே இந்த சேஞ்ச் ஃபிரேம்கள் ஒருவரது எந்தவிதமான ஸ்டைலுக்கும் ஏற்ற ஒரு நிறைவான தோற்றத்தை வழங்கும்.
மிகப் பிரபலமான ஒரிஜினல் வேபேரர் ஃபிரேம் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது ரேபான் சேஞ்ச், ரேபான் சேஞ்ச் மற்றும் ட்ரான்சிஷன்ஸ் மற்றும் ரேபான் ஆப்டிக்ஸ் சேஞ்ச் உள்ளிட்ட வகைகளில் கிடைக்கின்றன. துணிவின் அடையாளமாக இருக்கும் இந்த புதிய வேபேரர் ஓவல் ரேபான் சேஞ்ச், ரேபான் சேஞ்ச் மற்றும் ட்ரான்சிஷன்ஸ் மற்றும் ரேபான் ஆப்டிக்ஸ் சேஞ்ச் வகைகளில் கிடைக்கிறது. இவை சாலிட் கோடுகளாக மாறக்கூடிய, ஒளி ஊடுருவும் பல்வேறு தெளிவான வண்ணங்களில் கிடைக்கிறது.
செல்லுலோஸ் அசிடேட் ஃபிரேம்களை உருவாக்கும் பாரம்பரிய கைவினை கலையோடு இந்த மேம்பட்ட தொழில்நுட்ப புதுமையை இணைத்து வடிவமைக்கப்பட்டதால் ரேபான் சேஞ்ச்-ஆல் வெளிப்படும் ஒளிக்கேற்ப மாறமுடிகிறது. அதன் ஃபிரேம்களின் தனித்துவமான நிறங்கள் மற்றும் தோற்ற அமைப்புகள் யாவும் டிரான்சிஷன்ஸ் ஃபோட்டோக்ரோமிக் சாயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும். அவை புற ஊதா ஒளியில் பட்டவுடன் விரைவாக செயல்படத் துவங்குகின்றன.
டிரான்சிஷன்ஸ் பிக்மென்ட்களை சேர்த்ததன் காரணமாக ஒவ்வொரு ஜோடி கண்ணாடியும் ஒரு தனித்துவமான சுயத்தைப் பெறுகிறது. அதாவது ஒவ்வொரு கண்ணாடியின் தோற்ற அமைப்பும் ஒவ்வொரு வகையில் மாறுபட்டதாகும். ஒளியின் அளவு அதிகமாகும்போது, நிறமியும் அதற்கேற்ப அதிகமாக மாறுகிறது. சூரிய ஒளியில் பட்ட சில நொடிகளில் ஃபிரேம் செயல்படத் துவங்குகிறது, மற்றும் வசிப்பிடத்திற்குள் வந்த சில நிமிடங்களில் நிறம் மீண்டும் மாறிவிடும்.
எசிலார் லக்சோட்டிகா நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், ஃபெடரிக்கோ பஃபா பேசுகையில்,“ ட்ரான்சிஷன்ஸ் பிராண்டின் பவர் மற்றும் அதன் தொழில்நுட்பத்தின் உதவியுடன், வெளிச்சம் பட்டால் நிறம் மாறக்கூடிய ரேபான் சேஞ்ச் என்கிற புதுமையான ஃபிரேம்கள் மூலம் கண்ணாடிகளை அணியும் அனுபவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளோம். லென்ஸ் துறையில் முன்னோடி பிராண்டான ட்ரான்சிஷன்ஸ் உடன், பிரேம்களில் முன்னணி வகிக்கும் ரேபான் ஒருங்கிணைந்ததால், பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு தயாரிப்பினை எங்களால் உருவாக்க முடிந்தது. இதனால் நுகர்வோர் அணியும் அன்றாட கண்ணாடிகளை ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக மாற்றுவதும் சாத்தியமானது” என்றார்.