இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னனி மருத்துவ தீர்வு வழங்குநரான கிம்ஸ்ஹெல்த் அதன் நாகர்கோவில் வளாகத்தில் உயர்தர எண்டோஸ்கோப்பி மையத்தை திறந்தது. இந்த மையத்தை ஹெல்த்கேர் வழங்குநர்கள் சங்கத்தின் (AHPI) பொது இயக்குநர் டாக்டர் கிரிதர் ஞானி மற்றும் AHPI, ANBAI மற்றும் CAHO ஆகியவற்றின் நிறுவனர் மற்றும் புரவலர் டாக்டர் அலெக்சாண்டர் தாமஸ் ஆகியோர் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா முன்னிலையில் திறந்து வைத்தனர். மருத்துவமனையானது "தரமான பராமரிப்பு, தாக்கத்துடன் கூடிய மாற்றம்” என்ற CME அமர்வையும் ஏற்பாடு செய்தது. இதில் புகழ்பெற்ற தேசிய பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வளாகத்தில் இந்த உயர்தர எண்டோஸ்கோப்பி மையத்தை நிறுவியதன் மூலம் கிம்ஸ்ஹெல்த் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை படைத்துள்ளது” என டாக்டர் கிரிதர் ஞானி கூறினார். மேலும், ஓரே இடத்தில் நோயாளிகளின் அனைத்து தேவைகளையும் கேட்டறிந்து உயர்தர சேவைகளை தொடர்ந்து வழங்குவதன் மூலம் மருத்துவ தீர்வுகளை அனைவரும் அணுகக்கூடிய வகையிலும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான மருத்துவமனையின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
இந்த முன்னேற்றங்களின் முக்கியத்துவம் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா, “இந்த புதிய மையம், நோயாளிகளின் நலன்களை மேம்படுத்தி மொத்த மருத்துவ அனுபவத்தை உயர்த்த வேண்டும் என்ற எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கான சான்றாகும். இது மருத்துவ காஸ்ட்ரோஎன்ட்ராலஜி துறையில் நோய்களை கண்டறிய உயர்தர முறைகளை கையாளுவது மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான எங்கள் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது” என்றார்.
இந்த அதிநவீன எண்டோஸ்கோப்பி மையமானது மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது இரைப்பை குடல் கோளாறுகளை துல்லியமாக கண்டறிவதற்கான உயர்-தெளிவு கொண்ட காட்சிகளை உறுதி செய்கிறது. கிம்ஸ்ஹெல்த்-ன் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி துறையானது தடுப்பு நடவடிக்கைகள், நோய் கண்டறிதல் மற்றும் செரிமான மற்றும் ஹெபடோபிலியரி நோய்களை கையாளுதல் ஆகியவற்றுக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் நவீன உபகரணங்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன.
தொடக்க விழாவைத் தொடர்ந்து, தரமான பராமரிப்பு, தாக்கத்துடன் கூடிய மாற்றம் பற்றிய அறிவுப்பூர்வமான கலந்துரையாடலுக்காக சுகாதார நிபுணர்களை ஒன்றிணைத்த CME அமர்வு நடைபெற்றது. இதில் டாக்டர். கிரிதர் ஞானி, டாக்டர். அலெக்சாண்டர் தாமஸ், டாக்டர். எம்.ஐ. சஹதுல்லா மற்றும் கிம்ஸ்ஹெல்த், மரபணு மருத்துவம் பிரிவின் , இணை ஆலோசகர் டாக்டர் ரோஷன் டேனியல் உள்ளிட்ட நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில் தரம் மற்றும் அங்கீகாரம், சுகாதாரத் தொடர்பு, தரமான பராமரிப்பில் தலைமைத்துவம், துல்லியமான மருத்துவம் மற்றும் மரபியல் என பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக நடைபெற்றது.