கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி ப்ராமிஸ்

 


கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் அதன் முதல் தயாரிப்பான கேலக்ஸி ப்ராமிஸ்-ஐ அறிமுகப்படுத்தியது . இதன் மதிப்பானது ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, சிக்னேச்சர் பிளான், எலைட் பிளான், பிரீமியர் பிளான் மற்றும் மேம்படுத்தப்பட்ட விருப்ப கவர்களுடன், மலிவு மற்றும் அதே நேரத்தில் அனைத்துவிதமான  சுகாதாரக் காப்பீட்டை விரும்பும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த காப்பீட்டினை பின்வரும் நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் விளம்பரப்படுத்துகிறது. 

அதன்படி, பிரபல தொழில்துறை நிறுவனமான டிவிஎஸ் குழுமத்தின் வேணு சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் மற்றும் சுந்தரம்,  முன்னதாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்டின் சிஎம்டியாக இருந்த ஸ்ரீ.வி.ஜெகந்நாதனின் குழுமமான கிளேட்டன் லிமிடெட் மற்றும் ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் கோ.லிமிடெட் நிறுவனர்.  தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் ஐஆர்டிஎஐ உரிமத்தைப் பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

 பணவீக்கம், மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் சிறப்புப் பராமரிப்புக்கான வளர்ந்து வரும் தேவை ஆகியவற்றின் காரணமாக ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும், இந்தியாவின் வேகமாக உயரும் சுகாதாரச் செலவுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது ஒன்பது தனித்துவமான நன்மைகளுடன் வருகின்றன, இது பாலிசிதாரர்களுக்கு விரிவான ஆதரவை உறுதி செய்கிறது. இந்தத் திட்டங்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் சிக்னேச்சர் திட்டத்தில் 90 மற்றும் 180 நாட்கள் வரை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவரேஜ் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளையும் இந்த கவரேஜ் வழங்குகிறது.

அன்லிமிடெட் ஆக காப்பீட்டுத் தொகையை பயன்படுத்தும் அம்சம் மூலம் பாலிசிதாரர்கள் ஒரு ஆண்டிற்குள் பல உரிமைகோரல்களை மேற்கொள்ளலாம். கிளைம் செய்யப்பட்டும் போதெல்லாம் மீண்டும் தொகையானது பாலிசியில் நிரப்படுகிறது. சுகாதாரச் செலவுகளை நிர்வகிக்க பிரீமியம் வாக்குறுதி திட்டங்கள் 55 வயது வரை அல்லது க்ளைம் செய்யப்படும் வரை நிலையான பிரீமியம் விகிதத்தை பராமரிக்கின்றன.  68 பொருட்களுக்கான கவரேஜுடன் கூடுதலாக அட்மிஷன், பதிவு மற்றும் காப்பீட்டு செயலாக்கக் கட்டண வசதிகள் உள்ளன. 

இதில் இணை கட்டணம் ஏதும் இல்லை. அறை வாடகைக்கான கவரேஜ், டிஜிட்டல் ஐசியு உட்பட ஐசியு-ன் அனைத்து தேவைகளையும் க்ளைம் செய்துகொள்ளலாம். காப்பீடு மேற்கொண்டிருப்பவர் உறுப்பு தானம் செய்திருந்தால், காப்பீடு செய்த நபர் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே பாலிசிதாரர்களாக இருந்தால் 2 வருட பிரீமியம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பெண்களை மையமாகக் கொண்ட பலன்களில் பிரசவ சிகிச்சை கருப்பையில் கரு அறுவை சிகிச்சை, பிறப்புக்கு முந்தைய ஸ்கேன் மற்றும் பிரசவத்துக்குப் பிறகான கவரேஜ் உள்ளிட்டவை அடங்கும். காப்பீட்டுத் தொகையில் 500 சதவிதம் வரை பாதுகாக்கப்படும். காலா ஃபிட் - ப்ரோ ஆக்டிவ் கேர் திட்டம் புதுப்பித்தலின் போது 20 சதவிதம் வரை பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும் மற்றும் காப்பீடு செய்யப்பட்ட நபரின் செயல்பாடுகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நாணயங்களுடன் வெகுமதி அளிக்கப்படும்.  காப்பீட்டாளர் எந்த அறை வகையையும் தேர்வு செய்யலாம் மற்றும் பெட் பை பேக் மூலம் காப்பீடு செய்தவர் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை 36 மாதங்களில் இருந்து 24 அல்லது 12 மாதங்களாக குறைக்கலாம்.

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜி. சீனிவாசன் பேசுகையில், “ கேலக்ஸி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆனது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுகாதாரத்தை அணுகக்கூடியதாகவும், நம்பகமானதாகவும், செயலூக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எங்கள் நெறிமுறைகள் வேரூன்றியுள்ளன.   இந்த புதிய திட்டங்களின் மூலம், ஸ்திரத்தன்மை, மலிவு மற்றும் விரிவான குடும்ப ஆதரவின் கலவையை வழங்குவதன் மூலம் அதிகரித்து வரும் சுகாதார செலவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form