உடல்நல காப்பீட்டு வழங்கல்களை விரிவுபடுத்தும் டாடா ஏஐஜி



இந்தியாவின் ஒரு முன்னணி பொதுக் காப்பீட்டு வழங்குநரான டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மெண்டல் வெல்பீயிங், எம்பவர் ஹர், ஓபிடி கேர், கேன்கேர் மற்றும் ப்ளக்ஸி ஷீல்ட் ஆகிய ஐந்து சிறப்பு கூடுதல் பலன்களுடன் தமிழ்நாட்டில் தனது உடல்நலக் காப்பீட்டு வழங்கல்களை பலப்படுத்துகிறது. இந்த கூடுதல் பலன்கள் குறிப்பாக இந்த மாநிலத்தின் குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட மற்றும் மாறுபட்ட உடல்நலத் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன, மனநலம், பெண்களின் ஆரோக்கியம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் வழக்கமான மருத்துவ செலவுகள் போன்ற பகுதிகளில் விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் முக்கிய கிளைகளுடன் டாடா ஏஐஜி தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்பை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தின் விரிவான நெட்வொர்க் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பணமில்லா சிகிச்சைக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்கின்ற 1000 க்கும் அதிகமான மருத்துவமனைகளை உள்ளடக்குகிறது. முகவர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒரு நன்கு நிறுவப்பட்ட நெட்வொர்க் மூலம் இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் தரமான சுகாதார காப்பீட்டு தீர்வுகளை கொண்டு வருகிறது.

இந்த செயல்திறன் மாநிலத்தில் தரமான காப்பீட்டு தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது. டாடா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களிடையே புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவை மிகவும் அடிக்கடி பதிவாகும் நாள்பட்ட நிலைகளில் ஒன்றாக உள்ளது. நாள்பட்ட நோய் உரிமைகோரல்களில் அதிக பங்கு, ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களிடையே நாள்பட்ட நோய் உரிமைகோரல்களின் அதிக சதவீதத்தைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க போக்குடன், 46-55 வயதினரிடமிருந்து வருகிறது. நிதியாண்டு 24 இல் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த உரிமைகோரல் தீர்வு 90.16 சதவிதம் (முடிக்கப்பட்ட உரிமைகோரல் தொகை ) தொழில்துறை சராசரியான 85 சதவிதத்தை  விட கணிசமாக அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, உயர்தர சுகாதார காப்பீட்டு கவரேஜ் கிடைப்பதை உறுதி செய்கின்ற கண்டுபிடிப்புகளில் அதன் தொடர்ச்சியான கவனம் செலுத்துதல் மூலம், டாடா ஏஐஜி தமிழ்நாட்டில் தனது இருப்பை விரிவுபடுத்தத் தயாராக உள்ளது.

மூத்த செயல் துணைத் தலைவர் மற்றும் முகமை தலைவரான பிரதிக் குப்தா கூறுகையில், “அனைவருக்கும் அணுகக்கூடியதான தரமான காப்பீட்டை வழங்குவதில் டாடா ஏஐஜி உறுதியாக உள்ளது. இங்கு எங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எங்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்-முதல் அணுகுமுறைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் உயர்மட்ட, வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு தீர்வுகளை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form