இந்தியாவிலும் மத்திய கிழக்கிலும் 22 ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவைக்கான பாரம்பரியத்துடன் புகழ்பெற்று விளங்கும் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை அதன் அதிநவீன மாடுலர் அறுவை சிகிச்சை அரங்க வளாகத்தை நாகர்கோவிலில் உள்ள அதன் கட்டமைப்பில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கிம்ஸ் ஹெல்த்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸஹதுல்லா, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்க வளாகத்தில் ஐந்து மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. இவை பொது மற்றும் லேப்ராஸ்கோபிக், எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் இயல் அறுவை சிகிச்சை, இரைப்பை/ குடல் அறுவை சிகிச்சை, சிறுநீர் தொடர்பான அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான அறுவை சிகிச்சைகளைச் செய்ய மருத்துவக் குழுவிற்கு உதவுகின்றன. இவற்றில் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் படும்.
இந்த அறுவை சிகிச்சை அரங்க வளாகம் 7,000 சதுர அடி பரப்பளவில், நான்கு அறுவை சிகிச்சைக்கு-முன்பான படுக்கைகள், ஐந்து அறுவை சிகிச்சைக்குப்-பின்பான பராமரிப்புப் படுக்கைகள், ஒரு அறுவை சிகிச்சை மருந்தகம், ஒரு ஸ்டெரைல் ஸ்டோர், இரண்டு அறுவை சிகிச்சை ஆலோசனை அறைகள், ஒரு மயக்க மருந்து நிபுணர் அறை, ஒரு உபகரண ஸ்டோர் மற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வறைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
எளிதில் அணுகக்கூடிய மற்றும் தொடர்ச்சியான அறுவை சிகிச்சையை உறுதிப் படுத்த இந்த வளாகம் 24/7 செயல்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை அரங்க வளாகத்தில் நோய்த் தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கென்றே லாமினர் ஃப்ளோ மற்றும் ஹெப்பா ஃபில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை அரங்க வளாகத்தை திறந்து வைத்து பேசுகையில் எம்.ஆர் காந்தி, தனிப்பயனாக்கப்பட்ட கவனம், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ நெறிமுறைகள் மற்றும் கிம்ஸ் ஹெல்த் காட்டும் அர்ப்பணிப்புக்காக நிர்வாகத்தைப் பாராட்டினார். இந்த மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்க வளாகம் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் தக்க நிவாரணம் வழங்கும் என்றார்.
டாக்டர் ஸஹதுல்லா பேசுகையில் இந்த அறுவை சிகிச்சை அரங்க வளாகம் மருத்துவத் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நோயாளிகளின் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாடுலர் வடிவமைப்பானது, மருத்துவத் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி அடையும் போது, எளிதான பராமரிப்பு மற்றும் விரைவான புதுப்பிப்புகளை சுலபமாக ஆக்குகிறது என்றார்.