ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸியின் புதிய விளம்பரப்படம் வெளியீடு



வெர்சுனி இந்தியா குழுமத்தின் முன்னணி மிக்ஸர் கிரைண்டர் பிராண்டான ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்ஸ், இந்தியா மற்றும் ஆசியாவின் அதிக சக்திவாய்ந்த மிக்ஸியான ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸியின் புத்தம் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. நம்பிக்கையூட்டும் “ப்ரீத்திக்கு நான் கியாரண்டி” என்கிற அதன் பிரபல வாசகத்துடன் இந்த விளம்பரம் வெளிவந்துள்ளது. அதன் நுகர்வோருடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்தும் வகையில் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிராண்டின் புதிய விளம்பரம், அதன் தினசரி பயன்பாடு மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் ப்ரீத்தி உருவாக்கும் பிணைப்புகளை முழுமையாக வெளிப்படுத்துகிறது.

கலகலப்பான இந்த புதிய விளம்பர படம் ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸியின் சக்திவாய்ந்த செயல்திறன் துவங்கி பன்முகப் பயன்பாடுகள் என அதன்  பல்வேறு செயல்திறன்களை எடுத்துக் கூறுகிறது. மேலும், அன்றாட சமையலறை வேலைகளை ஒரு சிரமமில்லாத மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதற்கு ப்ரீத்தி எப்படி உதவுகிறது என்பதையும் வலியுறுத்துகிறது.  இந்த பிராண்டின் புதிய விளம்பரத்தில் - பிரபலங்களான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 நுகர்வோரின் அன்றாட சமையலறை அனுபவங்களை மேம்படுத்த வேண்டும் மற்றும் பண்டிகைகளை இன்னும் சிறப்பாக கொண்டாட அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ப்ரீத்தி பிராண்டு இந்த புதிய விளம்பரத்தை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள அனைத்து முன்னணி சேனல்களிலும் இந்த விளம்பரத்தை ஒளிபரப்புகிறது.

பண்டிகைக் காலத்தின் உற்சாகத்தை கொண்டாடும் அதேவேளையில், தலைசிறந்த தயாரிப்புகளை வழங்க வேண்டுமென்கிற ப்ரீத்தியின் உறுதிப்பாட்டையும் இந்த விளம்பரம் வலியுறுத்துகிறது. ப்ரீத்தி பிராண்டின் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள ப்ரீத்தி ஸோடியாக் - அதன் ஒப்பற்ற செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக பாராட்டப்படுகிறது; இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டின் மூலமாகவும் இந்தியா மற்றும் ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மிக்ஸர் கிரைண்டராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 உற்சாகமூட்டும் இந்த தொலைக்காட்சி விளம்பரத்துடன் சேர்த்து, பண்டிகைக் கால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ப்ரீத்தி நுகர்வோருக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 15, 2024 வரை, பல்வேறு வகையான ப்ரீத்தி தயாரிப்புகளுக்கு நுகர்வோர் பிரத்யேக சலுகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சலுகைகளை பெறலாம்.

இந்த அறிவிப்பு குறித்து பேசிய, வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் ஐஎஸ்சி-யின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான குல்பஹார் தவ்ரானி, “காலத்தைக் கடந்து உழைக்கக் கூடிய புதுமையான, சக்திவாய்ந்த மற்றும் நீண்டகாலத் தீர்வுகளின் மூலம் எங்கள் நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பல்வேறு தளங்களில் வெளியாகும் எங்கள புதிய பண்டிகைக் கால விளம்பரமான 'ப்ரீத்திக்கு நான் கியாரண்டி’, நாங்கள் வழங்கும் வாக்குறுதிக்கு ஒரு சான்றாகும். பல்வேறு வகையான தயாரிப்புகள் மூலமாகவும், நுகர்வோருக்கு உற்சாகமூட்டும் சலுகைகளை வழங்குவதன் மூலமாகவும் - இந்த பண்டிகைக் காலம் வெற்றிகரமாக அமையும் எனவும்; நம்பிக்கை மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் குடும்பங்களை ஒருங்கிணைக்கும் மகிழ்ச்சியான தருணமாகவும் இந்த பண்டிகை இருக்கும் எனவும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form