டிவி ஆப்ரேட்டர்களின் ஒருதலைபட்சமான செயலால் அவதிப்படும் பொதுமக்கள்

 ஒரு ஏமாற்றமளிக்கின்ற நிகழ்வுகளின் விளைவாக, முக்கிய ஆப்ரேட்டர்களான டிசிசிஎல், விகே டிஜிட்டல், மற்றும் எஸ்சிவிஆகியவற்றின் தவறான தகவல்கள் மற்றும் நியாயமற்ற, ஒருதலைப்பட்சமான செயல்களால், தமிழ்நாட்டின் சந்தாதாரர்கள் ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் உட்பட தங்களுக்குப் பிடித்த ஸ்டார் சேனல்களை காண முடியாமல்  தவித்து வருகின்றனர். இந்த ஆப்பரேட்டர்களின், ஸ்டார் விஜய் மற்றும் பிற ஸ்டார் சேனல்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளது என்ற தவறான கருத்துக்கள், வாடிக்கையாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ அல்லது வாடிக்கையாளர்களின் எந்தவித கோரிக்கைகளும் இல்லாமல் இந்த சேனல்களை மொத்தமாக தங்கள் அடிப்படை தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு காரணமானது.

 டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், தமிழ்நாட்டிலுள்ள அதன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ளது. டிசிசிஎல், விகே டிஜிட்டல் மற்றும் எஸ்சிவி ஆகியவை 09.10.2024 தேதியிட்ட டிடிஎஸ்எடி அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தங்களால் உருவாக்கப்பட்ட இந்த நிலைமையை விரைவாகச் சரிசெய்வார்கள் என்று இந்த நெட்வொர்க் நம்புகிறது.

இந்த திடீர் நடவடிக்கை, எண்ணற்ற பார்வையாளர்களை வசீகரிக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மற்றும் உற்சாகமான ஐசிசி மகளிர் T20 உலகக் கோப்பை உட்பட, அவர்கள் விரும்பும் பொழுதுபோக்கை இழக்கச்செய்தது. ஸ்டார் சேனலின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது என்ற தவறான தகவல்களை கூறியதன் மூலம் சில எம்எஸ்ஒக்கள் ஒருதலைப்பட்சமாக பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கான சந்தாதாரர்கள் வாய்ப்பை  சீர்குலைக்க முயன்றனர்.  

அதனால் அது  இந்த திடீர் மாற்றம் நுகர்வோரை ஏமாற்றமடையச் செய்தது மேலும் அவர்களின் பொழுதுபோக்குத் தேவைகளைப் பறித்துள்ளது. இந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள், அக்டோபர் 1, 2024க்கு முந்தைய பார்வை அனுபவத்தை உடனடியாகத் திரும்பப்பெற  உடனடியாக தங்கள் ஆப்பரேட்டர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் இன்னும் தங்களுக்குப் பிடித்த சேனல்களுக்கான வாய்ப்பை திரும்பப் பெறவில்லை என்றால், அவர்களுக்கும் அவர்களின் பொழுதுபோக்குத் தேர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மாற்று ஆப்பரேட்டருக்கு மாறுவதைப் பற்றி அவர்கள் பரிசீலிக்கலாம்.

“ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படவில்லை. இந்த பண்டிகைக் காலத்தில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள் முழுவதிலும் முக்கிய உள்ளடக்கத்தின் ஒரு வலுவான வரிசைப்படுத்தலை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பல ஆண்டுகளாக, பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது, கடந்து செல்கின்ற ஒவ்வொரு சீசன் மூலம் அதன் இணைப்பு வலுவடைகின்றதுடன் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளது. பெண்கள் கிரிக்கெட் போட்டியின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024 கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வாகும். எங்கள் பார்வையாளர்களை உயர்தர உள்ளடக்கத்துடன் தொடர்ந்து மகிழ்விக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று டிஸ்னி ஸ்டார் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form