மணிபாக்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் தென்னிந்தியாவில் திறம்பட செயல்பாட்டினை துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஓசூர், சேலம், காஞ்சிபுரம் மற்றும் ஆம்பூர் ஆகிய இடங்களில் புதிய கிளையை துவங்கியுள்ளது. இது நகரம் மற்றும் அதற்குக் கீழே உள்ள சிறு தொழில்முனைவோருக்கு வணிகக் கடன்களை வழங்குவதன் மூலம் நிதியளிப்பில் கவனம் செலுத்துகிறது. தற்சமயம், செப்டம்பர் 2024 வரை 28 கிளைகளில் 18 கிளைகள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.
மணிபாக்ஸ் செப்டம்பர் 29, 2024 நிலவரப்படி 141 கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் அக்டோபர் 2024 இன் இறுதிக்குள் 12 மாநிலங்களில் 156 கிளைகளைத் திறக்க திட்டமிடுகிறது. மார்ச் 2024 நிலவரப்படி 8 மாநிலங்களில் 100 கிளைகளை உருவாக்கி, கிளை நெட்வொர்க்கில் 50 சதவித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் முடிவடைந்த ஈக்விட்டி பங்கான 176 கோடி ரூபாய் மூலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2024 மாதங்களில் கிளை நெட்வொர்க்கில் 43 கிளைகளை சேர்க்க உதவும்.
மணிபாக்ஸ் குறுந்தொழில் முனைவோருக்கு வணிகக் கடன்களை வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவில் நிதிச் சேர்க்கைக்கு வழிவகுத்தது, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஜூன் 2024 வரை ரூ.1,300 கோடிக்கும் மேலான மொத்தப் பட்டுவாடாக்களுடன், மணிபாக்ஸ் 1.6 லட்சத்திற்கும் அதிகமான கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. அதில் 58 சதவித பெண்கள் மற்றும் 30 சதவித புதிதாக கடன் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வணிக ரீதியான திட்டமானது, அதன் கிளை வலையமைப்பை 160க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு விரிவுபடுத்துவது மற்றும் மார்ச் 2024 நிலவரப்படி ரூ.730 கோடியிலிருந்து 2025 மார்ச்சுக்குள் ரூ.1,300 கோடிக்கு மேல் ஏயுஎம்-ஐ அடைவது ஆகியவை அடங்கும்.
மணிபாக்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன இணை நிறுவனர் மயூர் மோடி பேசுகையில், “ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்பாடுகளைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தென்னிந்தியாவில் 18 கிளைகளைச் சேர்ப்பதன் மூலம், கிராமப்புற இந்தியாவில் நமது பரவலையும் தாக்கத்தையும் மேம்படுத்தவும், குறுந்தொழில் முனைவோர்களுக்கு முக்கிய நிதி உதவியை வழங்கவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் உதவும்” என்றார்.