பிரிட்டானியா நிறுவனம் தி லாபிங் கவ் திட்டத்தின் கீழ் பாலாடைக் கட்டிகளை உற்பத்தி செய்கிறது



இந்தியாவின் முன்னணி பாலாடை கட்டி தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா பெல் பூட்ஸ் நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திட்டப்பணிகளை குறிப்பிட்டு உள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் தி லாபிங் கவ் தயாரிப்புகளில் உள்ளூர் தேவைகளுக்காக தனது பாலாடை கட்டி தொழிற்சாலையை இந்தியாவில் திறப்பதாக அறிவித்துள்ளது. 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய நுகர்வோருக்கு சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான அதன் உறுதிபாட்டை இந்நிறுவனத்தின் மூலம் உறுதிப்படுத்த உள்ளது. இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், நான்கு ஒருங்கிணைந்த பால் சுற்றுச்சூழல் அமைப்பை பெருமைப்படுத்தும் விதமாக ரஞ்சன்காநில் உள்ள பாலாடைக்கட்டி தொழிற்சாலை உள்ளூர் பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

 இந்த முன்முயற்சி உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், நிலையான வணிகத்தை உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் பால் சேகரிப்பு மையங்கள் மேம்பட்ட சோதனை திறன்களை கொண்டுள்ள, மூல பாலின் தரம் தளத்தில் 31 தர அளவருக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான பால் விவசாயிகளின் வாழ்வியல் தரத்தை மேம்படுத்தும் விதமாக, பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண்மை, இனப்பெருக்கம் மற்றும் கால்நடைகளுக்கு உணவளித்தல் ஆகிய மூன்று திட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த ஆதரவு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. 

வீடு வீடாக சென்று கால்நடை சுகாதார முகாம்கள், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் இன பயிற்சி திட்டங்கள், தரமான தீவன விதைகள் விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு வெளிப்படையான நேரடி கட்டண சேவைகள் போன்ற சிறந்த விவசாய நடைமுறைகளை பிரிட்டானியா நிறுவனம் இத்திட்டத்தின் மூலம் செய்து வருகிறது.

  மகாராஷ்டிராவின் மிகப்பெரிய உணவு பூங்கா ஒன்றில் 220 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய கிரீன் பீஸ்ட் தொழிற்சாலையாக பால் பண்ணை அதிநவீன வசதிகளுடன் கூடிய தொழிற்சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள் தயாரிப்புகளின் விரிவான வரம்பில் தற்போது பிரிட்டானியா தி லாபிங் கவ் சீஸ் உட்பட முழு அளவிலான பாலாடை கட்டிகளை பல்வேறு வடிவங்களில் தயாரித்து வருகிறது. ஐந்து வகையான உற்பத்தி கோட்பாடுகளுடன் கூடிய இந்த வசதி, செட்டார் மற்றும் மொசரெல்லா போன்ற இயற்கை பாலாடை கட்டி வகைகளுக்கு ஆண்டுக்கு சுமார் 6000 டன்கள் அளவுக்கும், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலாடை கட்டிகள் ஆண்டுக்கு சுமார் 10,000 டன்கள் அளவுக்கு உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டிருப்பதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் வேலை வாய்ப்புகள் உயர்த்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் பங்களித்து உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் மிக உயர்ந்த உணவு பாதுகாப்பு மற்றும் தர சான்றிதழோடு உறுதி செய்யப்பட்டு, இறுதியாக நுகர்வோருக்கு மிக உயர்ந்த தரத்தை தொடர்ந்து வழங்கும் பிரீமியம் பாலாடை கட்டிகளின் தயாரிப்பு இங்கு நடைபெறுகிறது.

இந்த வசதியை அறிமுகப்படுத்தியது குறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான வருண் பெரி கூறுகையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பால் விவசாயிகளுக்கு ஆதரவளித்து, நிலையான கால்நடை மேலாண்மை, இனப்பெருக்கம் மற்றும் தீவன நடைமுறைகள் மூலம் அவர்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான தொடர் வர்த்தகத்தை அளிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தரம் மற்றும் நிலைத்தன்மையில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளதோடு மட்டுமல்லாமல், பால் உற்பத்தியில் மகாராஷ்டிராவின் தலைமையானது, பிரீமியம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பால் பொருட்களுக்கான மையமாக உருவாக்கி, புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது” என்றார்.

இது குறித்து பெல் குழுமத்தின் செயல் அதிகாரி சிசில் பிலியோடு கூறுகையில், பெல் நிறுவனம் 160 ஆண்டு கால தயாரிப்பு வரலாற்றில் பாலாடை கட்டிகளின் செயல்பாட்டின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் ஒரு அதிநவீன பாலாடை கட்டி தொழிற்சாலையின் தொடக்கத்தை பிரிட்டானியா நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது. பெல் குழுமத்தில் ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுக்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டு, ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தரமான பாலாடை கட்டிகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முழு திறனையும் பெற்றுள்ளது” என்றார்.

இது குறித்து பிரிட்டானியா பெல் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அபிஷேக் சலுகை கூறுகையில், பிரிட்டானியா பெல் ஃபுட் சின் அதிநவீன பாலாடை கட்டி தயாரிப்பு வசதி, அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தி தரமான உணவுப் பொருளாக விநியோகம் செய்ய உறுதி கொண்டுள்ளது. உலக தரம் வாய்ந்த உற்பத்தி தரநிலைகளை கொண்டு தயாரிக்கப்படும் பாலாடை கட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் பிரிட்டானியா நிறுவனத்துக்கும், பெல் நிறுவனத்துக்குமான இணைப்பு மேலும் மேலும் வலு சேர்க்கும் வகையில் செயல்படும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form