திறன்களை வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமான மசாய் பள்ளி, இந்தியா முழுவதும் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கனவுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. விளைவுகளை வழங்கும் தொழில் நிறுவனமான மசாய் பள்ளி, 100க்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பயிற்சி அளித்து, இத்தனை வருடங்களில் 6,000 மாணவர்களின் பதிவைக் கண்டுள்ளது.
மதுரையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலமுருகன் ஆர், தனது தாயார் இறந்ததால் தனது இளம் வயதிலேயே இழப்பையும் கஷ்டத்தையும் சந்தித்தார். கொத்தனார் வேலை செய்யும் அவரது தந்தை குறைந்த கல்வியுடன் அவரை வளர்த்தார். தமிழ்வழிப் பள்ளிகள் வழியாகச் பயின்று, கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கு ஆங்கில மொழித் தடையை எதிர்த்துப் போராடி, இறுதியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்தில் முதன்முதலில் பட்டதாரியாக இருந்தாலும், நிதிப் போராட்டங்கள் தொடர்ந்தன.
தெளிவான பாதை இல்லாமல், மாசாய் பள்ளியில் சேர்ந்த பாலமுருகனின் முடிவு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் மசாய் பள்ளியின் வேலை வாய்ப்பிற்கு பின் பணம் கட்டுதல் மாதிரியால் ஈர்க்கப்பட்டார். அவர் தனது ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ள போராடினார், அது விரைவாக மேம்பட்டது.15 நேர்காணல்களில் தோல்வியுற்ற பிறகு, பெங்களூரில் டிஸ்ப்ரிஸ் ஹ்யுரிஸ்டிக்ஸ்-ல் அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியராகப் தனது தொழில்நுட்பப் பயணத்தைத் தொடங்கினார்.
பாலமுருகன் பேசுகையில், “மசாய் பள்ளி எனது சவால்களை வாய்ப்புகளாக மாற்றியது. இது எனது கனவுகளைத் துரத்துவதற்கான திறமையையும் தைரியத்தையும் கொடுத்தது” என்றார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹக்ஸ்லி ஜெரார்ட் சிங் பல பின்னடைவுகளைக் கொண்ட ஒரு இரசாயன பொறியியல் பட்டதாரி, ஹக்ஸ்லி பல நிராகரிப்புகளை எதிர்கொண்டார் மற்றும் மோசடி வேலை வாய்ப்புகளில் விழுந்ததால் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்தார். இருப்பினும், ஒரு நண்பரின் ஊக்கம் அவரை மசாய் பள்ளிக்கு அழைத்துச் சென்றது. அங்கு ‘வேலை வாய்ப்பிற்கு பின் பணம் கட்டுதல்’ மாதிரி அவருக்குள் நம்பிக்கையின் ஒளியைத் தூண்டியது.
ஹக்ஸ்லி முதன்முதலில் மசாயின் பூட்கேம்பின் கோரிக்கைகளால் தினறினார், ஏனெனில் அவருக்கு கோடிங் முறையில் முன் அனுபவம் இல்லை. ஆயினும்கூட, அவர் விடாமுயற்சியுடன், கோடிங் கற்க இருந்த சவால்களை விரைவாக சரிசெய்து குழுப்பணியில் சிறந்து விளங்கினார். ஸ்விட்ச்காயின்-ல் மென்பொருள் உருவாக்குநராக வேலைவாய்ப்பு பெற்றார். பிளாக்செயின் மேம்பாடு குறித்த தனது அறிவை விரிவுபடுத்தத் தயாராகி வருவதால், ஹக்ஸ்லி இப்போது தேவை குறைவான ஆனால் நிறைவான சூழ்நிலையில் வேலை செய்கிறார்.
சந்தோஷ் சுதரராஜனின் கதை, தனது படிப்பு துறையை மாற்றிக்கொண்டு ஒருவரின் உண்மையான தேவையைட் துரத்துவதற்கான தைரியத்தை பிரதிபலிக்கிறது. முதலில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக இருந்த சந்தோஷ் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இறங்கினார், ஆனால் விரைவில் தனது சொந்த தயாரிப்பை உருவாக்குவதற்கான ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு வெப் டிசைனிங்-ஐ தேர்ந்தெடுத்தார். எளிய கூகுள் தேடலின் மூலம் மசாய் பள்ளியை அவர் கண்டுபிடித்தார், மேலும் அவர் தனித்துவமான வேலைவாய்ப்பிற்கு பின் கட்டணம் செலுத்துதல் வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டார்.
ஆரம்பத்தில், அவரது பெற்றோர் அவரது தொழில் மாற்றத்தால் கவலைப்பட்டனர், ஆனால் காலப்போக்கில் அவர்கள் அவரது தொழில்முனைவோர் உணர்வை ஆதரித்தனர். எதிர்பார்த்ததை விட விரைவில் எம்2பி நிறுவனமான சிண்டிஜென்-ல் வேலை பெற்றபோது அவரது கடின உழைப்பு பலனளித்தது. இது அவரையும் அவரது குடும்பத்தினரையும் கவர்ந்தது.மசாய் தனது நேரம் மற்றும் முயற்சிக்கான ஒரு மதிப்புமிக்க முதலீடு என்று அவர் நம்புகிறார்.
சந்தோஷ் கூறுகையில் “மசாய் ஒரு பூட்கேம்ப் மட்டுமல்ல; அது ஒரு ஏவுதளமாக இருந்தது. இது எனது வாழ்க்கையை மறுவடிவமைத்து பெரிய கனவு காண்பதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது” என்றார்.
மசாய் பள்ளியைப் பற்றி பேசிய மசாய் பள்ளியின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் பிரதீக் சுக்லா, “திறன்களை வளர்க்கவும், உறுதியான விளைவுகளுடன் மாணவர்களின் திறனைத் திறக்கவும் ஒரு தளத்தை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும், பல நிறுவனங்களுடன் இணைந்து குழுக்களை விரிவுபடுத்தவும், அதன் மூலம் மாணவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். கல்வி சூழலை படிப்படியாக மாற்றுவதை நாங்கள் கனவாக கொண்டுள்ளோம்” என்றார்.