மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் டிவிஷன் 2024 ஆம் ஆண்டு ஓட்டுநர் தினத்தை நினைவுகூரும் வகையில், மஹிந்திரா சார்த்தி அபியான் மூலம் டிரக் ஓட்டுநர்களின் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம், டிரக் ஓட்டுநர்களின் தகுதிவாய்ந்த பெண்களின் உயர்கல்விக்கான உரிமையை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு மஹிந்திரா ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய உறுதிபூண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வங்கி பரிமாற்றம் மூலம் ரூ.10,000/- உதவித்தொகையுடன் அவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் ஒரு சான்றிதழுடன் பாராட்டுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 75 க்கும் மேற்பட்ட போக்குவரத்து மையங்களில் தொடர்புகொள்வதன் மூலம் மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான செயல்முறை மூலம் முதற்கட்ட களப்பணி நடத்தப்பட்டது.
இதுவரை, இந்த முயற்சியின் கீழ் உதவித்தொகைகளின் மூலம் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அவர்களை அனுமதிக்கின்ற வகையில் 10,029 இளம் சிறுமிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் லீடர்ஷிப் ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 2024 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடத்தப்படும் இந்த பாராட்டு விழாவில் டிரக் டிரைவர்களின் மகள்களுக்கு 1000 ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்படும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் டிரக்ஸ், பஸ்சஸ், சிஇ, ஏரோ ஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் பிசினஸ் தலைவர் மஹிந்திரா குழுமத்தின் குழும நிர்வாகக் குழு உறுப்பினர் வினோத் சஹாய் கூறுகையில், "மஹிந்திரா சார்த்தி அபியான் மூலம், நாங்கள் உதவித்தொகைகளை மாத்திரம் வழங்கவில்லை, ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழிகளைத் திறக்கிறோம் மேலும் இளம் உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டுகின்றோம். டிரக் டிரைவர் கூட்டாளிகளின் மகள்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கையை மாற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்"என்றார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் கமெர்சியல் வெஹிகிள்ஸ் வணிகத் தலைவர் ஜலஜ் குப்தா இந்த நிகழ்வு குறித்து பேசுகையில், "மஹிந்திரா சார்த்தி அபியான் முன்முயற்சியின் மூலம், வர்த்தக வாகனப் பிரிவில் அதிகமான பெண்களைப் பார்க்கவும் மற்றும் அவர்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதில் உறுதியுடன் இருக்கவும், ஒவ்வொரு பெண்ணும் அவளது திறனைப் பூர்த்தி செய்து நாளைய தலைவர்களாக மாறுவதற்குமான வலுவான, சமமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம்"என்றார்.