தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆனது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவத்தின் பங்குகளை பங்குச்சந்தைகளிலிருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி வீரேந்திர சிங் ஜி. பிஷ்ட் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரபாத் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் வாய்மொழி உத்தரவு மூலமாக திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் சிறுபான்மை பங்குதாரரான மனு ரிஷி குப்தா தாக்கல் செய்த ஆட்சேபனைகளையும் தள்ளுபடி செய்துள்ளது. உத்தரவின் விவரங்கள் விரைவில் பதிவேற்றப்படும் என தெரிகிறது.
கடந்த ஜூன் 2023 இல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தனது பங்குகளை பங்குச் சந்தைகளில் இருந்து நீக்கும் திட்டத்தை அறிவித்தது. அதோடு, நிறுவனத்தின் பெற்றோரான ஐசிஐசிஐ வங்கியின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாக மாறியது. இந்த திட்டத்தின் மூலம், ஐசிஐசிஐ செக்யூரிட்டியின் பங்குதாரர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு 100 பங்குகளுக்கும் பதிலாக, ஐசிஐசிஐ வங்கியின் 67 பங்குகளை வழங்குகிறது.
இருப்பினும், சிறுபான்மை பங்குதாரர் மனு ரிஷி குப்தா, ஐசிஐசிஐ செக்யூரிட்டிகளில் 0.002% மற்றும் குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் 0.08% பங்குகளைக் கொண்டுள்ளார். இந்நிலையில், சிறுபான்மை பங்குதாரர்களுக்கு நீக்கப்பட்ட பங்குகள் திட்டமானது சாதகமற்றது . அதோடு, தனித்தனியாக நீக்குதலை எதிர்த்திருந்தார் மனு ரிஷி குப்தா. இருப்பினும், என்சிஎல்டி அவர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்தது மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் 93.8% பங்குதாரர்களால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை உறுதி செய்தது.
ஆட்சேபனைகளை எதிர்த்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வாதிட்டது, நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட பட்டியலிடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு விண்ணப்பங்களும் பங்குதாரர் ஜனநாயகத்தின் கொள்கையை முற்றிலும் இழிவுபடுத்துவதாகும். நிறுவனங்களுக்கான சட்டத்தின் பிரிவு 230(4) இன் விதிப்படி விண்ணப்பதாரர்களுக்கு எந்த இடமும் இல்லை என்று வாதிடப்பட்டது. அதோடு, சட்டத்தின் 230வது பிரிவின் கீழ் ஏற்பாடு செய்யும் திட்டத்திற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், குறைந்தபட்சம் 10% பங்கு அல்லது 5% கடனை வைத்திருக்கும் நபர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பது கூடுதல் தகவல்.
பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, சந்தை வல்லுநர்கள் கூறுகையில், ஐசிஐசிஐ செக்யூரிட்டிகளின் பங்குதாரர்கள் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளைப் பெறுவார்கள், இது மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் சிறந்த விலைக் கண்டுபிடிப்பு ஆகியவற்றை வழங்கும் என்பதில் ஐயமில்லை.