இந்தியாவின் தலைசிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா, மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது. அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. மோட்டோ ஜி45 ஸ்மார்ட்ஃபோனை வெறும் ₹9,999/- தொடக்கவிலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மெலிதான 8 மிமீ அளவில் மிக மிக குறைந்த 183 கிராம் எடையில் ஒரு நேர்த்தியான, அல்ட்ரா-ஸ்லிம் கட்டமைப்பை கொண்டிருப்பதை பறைசாற்றுகிறது.
இது கண்ணைக் கவரும் பிரில்லியன்ட் ப்ளூ, ப்ரில்லியண்ட் கிரீன் மற்றும் விவா மெஜந்தா- ஆகிய 3 வெவ்வேறு வகையான பேண்டோன் க்யூரேட்டட் வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி ஆகிய 2 மெமரி வேரியண்ட்டுகளில் கிடைக்கும், முறையே ரூ. 10,999 மற்றும் ரூ 12,999. விலைகளில் கிடைக்கும். நுகர்வோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு அல்லது அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக பழைய சாதனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது 1,000 கூடுதல் தள்ளுபடி பெற்று சாதனத்தை இறுதி விலையாக முறையே வெறும் ரூ. 9,999 மற்றும் ரூ. 11,999.க்கு பெறலாம்.
மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்ஃபோன் ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் 28 ஆகஸ்ட் 2024, அன்று பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
மோட்டோ ஜி45 5ஜி-இல் உள்ள அதன் மேம்பட்ட 50எம்பி குவாட் பிக்சல் கேமரா காட்சி விவரங்களை எந்த ஒரு வெளிச்சத்திலும் விதிவிலக்கான துல்லியமான மற்றும் உயிர்த்துடிப்புடன் வழங்குகி மலிவு விலை ஸ்மார்ட்போன் மூலம் படம் பிடிப்பதற்கான ஒரு புதிய தர வரையறையை வகுத்தமைக்கிறது. இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த 16எம்பி முன்புறக் கேமிரா மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய 2எம்பி மேக்ரோ விஷன் கேமிரா உடன் வருகிறது. கேமராவில் ஆடியோ ஜூம், ஸ்பாட் கலர், ஆட்டோ ஸ்மைல் கேப்சர், ஜெஸ்ச்சர் கேப்சர் மற்றும் ஆட்டோ நைட் விஷன் மோட் போன்ற பிரீமியம் மென்பொருள் அம்சங்களையும் மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரிவிலேயே அதிவேக 5ஜி செயல்திறன் கொண்ட க்வால்காம் ஸ்நாப்டிராகன் 6எஸ் ஜென் 3 ஆக்டா கோர் பிராசசர், ஈடு இணையற்ற மிக உயர்ந்த 480கே+ ஆன்டுடு மதிப்பீடு, விஒஎன்ஆர் உடன் மிக உயர்ந்த 13 5ஜி பேண்டுகள், 4க்கு4 எம்ஐஎம்ஒ, இரண்டு உள்ளமைக்கப்பட்ட ரேம் வகைகளில் முறையே 4ஜிபி அல்லது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம், 16ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ளக் கூடிய ரேஅம் பூஸ்டர், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பக வசதி, 120ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனான காட்சியமைப்பை வெளிப்படுத்தும் அதன் 6.5 அகல பஞ்ச் ஹோல் டிஸ்பிளேயில் மென்மையான கேம்ப்ளே, கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு, மிகக் குறைவான லேடென்சியுடனான இதன் 240 ஹெர்ட்ஸ் தொடு விகிதம், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தால் டியூன் செய்யப்பட்டு பல பரிமாண ஒலி மற்றும் ஸ்டுடியோ-தரத்தில் சிறப்பான ஆடியோவை வழங்கும் இரண்டு பெரிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ தொழில் நுட்பம், மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20வாட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் கனெக்ட் (8ஜிபி வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்) , ரெடி ஃபார் பிசி (8ஜிபி வேரியண்டில் கிடைக்கிறது), மோட்டோஅன்பிளக்ட், மோட்டோ சைகைகள், கைரேகை ரீடர்/பவர் பட்டன் காம்போ, ஆண்ட்ராய்டு 14 மற்றும் மூன்று வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் ஆண்ட்ராய்டு 15 க்கு மேம்படுத்துவதற்கான உத்திரவாதம்,ஆன்டி-ஃபிஷிங் மற்றும் ஆட்டோ-லாக் செயல்பாடுகள், ஃபேமிலி ஸ்பேஸ் 2.0. ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
இந்த அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த மோட்டோரோலா இந்தியாவின் நிர்வாக இயக்குனர், டி.எம். நரசிம்மன், "மோட்டோரோலாவின் அதி வேகமான மற்றும் செயல் திறன்மிக்க 5ஜி ஸ்மார்ட்ஃபோன் மோட்டோ ஜி45 5ஜி- ஐ மலிவு விலை சந்தை பிரிவில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். மோட்டோ ஜி45 5ஜி பயனர்களுக்கு பிரீமியம் 5ஜி அம்சங்களை அணுகக் கூடிய விலையில் வழங்கி இந்தியாவில் 5G மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவில் புதிய வரையறைகளை வகுத்தமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.