பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28 அன்று தொடங்குகின்ற பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் கோல்ட் ஸ்பான்சராக பணியாற்ற இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் பாராலிம்பிக் கமிட்டி ஆஃப் இந்தியா உடன் இணைய முன்வந்துள்ளது. காப்பீட்டின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு தனிநபரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கும் மற்றும் ஒரு நிதி ரீதியாகப் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம் விளையாட்டு ஆர்வலர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைக்கப்படுவதை இந்தக் கூட்டாண்மை நோக்கம் கொண்டுள்ளது.
பிசிஐ உடன் கூட்டுசேர்கின்றதன் மூலம், சிந்தனையில் சுதந்திரத்தை வளர்ப்பதற்கும், விளையாட்டில் உள்ளடக்கத்தை ஆதரிப்பதற்கும் மற்றும் தனிநபர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளைத் தொடர அதிகாரமளிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை முன்னிலைப்படுத்துவதற்கு எஸ்பிஐ லைஃப் நோக்கம் கொண்டுள்ளது. இந்த விளையாட்டு வீரர்களுடன் வலுவாக நிற்பதன் மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பிராண்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மில்லியன் கணக்கானவர்களை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் தங்கள் கனவுகளைத் தொடர ஊக்குவிப்பதை எஸ்பிஐ லைஃப் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் சிஎஸ்ஆர் தலைவர் ரவீந்திர ஷர்மா கூறுகையில், "இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆஃப் இந்தியா உடனான எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின் கூட்டாண்மையானது, எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், எல்லாத் தடைகளையும் மீறி தங்கள் ஆர்வங்களை பின்பற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையை கொண்டிருப்பதற்கு ஊக்குவிக்கின்ற எங்கள் பாரா-தடகள வீரர்களின் உண்மையான துணிச்சல், மீள்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் நம்பமுடியாத வரலாறுகளை முன்னுக்குக் கொண்டு வர இருக்கிறது. இது விளையாட்டை ஆதரிப்பது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாக குடும்ப பொறுப்புகளை உறுதி செய்கின்ற அதே வேளையில், மக்கள் தங்கள் அசாதாரண திறனை அடைய அதிகாரம் அளிப்பது பற்றியதாகும். எனவே, எங்கள் கூட்டாண்மைகள் "ApneLiye, ApnoKeLiye" என்ற தத்துவத்தின் ஒரு உண்மையான சாட்சியாக இருக்கிறது" என்றார்.
பாராலிம்பிக் கமிட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் ஜஜாரியா பேசுகையில், “ பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024க்கான அவர்களின் கூட்டாண்மைக்காக எஸ்பிஐ லைஃப் நிறுவனத்திற்கு நன்றி. இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் உடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாரிஸைக் கைப்பற்றுவதற்கான அவர்களின் நாட்டத்தில் நமது இந்திய மாவீரர்களை கொண்டாடுவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் நாங்கள் அவர்களை தளத்தில் வரவேற்க விரும்புகிறோம்"என்றார்.