கைலாக் : ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வெளியிடவிருக்கும் அனைத்திலும்-புதிய காம்பாக்ட் எஸ்யுவி கார்



ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனமானது, அதன் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கார் மூலம் இந்தியாவில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் அதன் வடிவமைப்பு பற்றிய ஒரு சிறிய முன்னோட்டமும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு புதுமையான முறையில் நாடு தழுவிய முன்னெடுப்பின் மூலம் இந்த வாகனத்திற்கு  பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் தேர்வை பிரதிபலிக்கும் வகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பாக்ட் எஸ்யுவி கார் கைலாக் என்று அழைக்கப்படவுள்ளது. 

2025 ஆம் ஆண்டில் வாகனம் விற்பனைக்கு வரும்போது இந்த பெயரிடும் போட்டியின் வெற்றியாளர் தான், ஸ்கோடா கைலாக் இன் முதல் உரிமையாளராக இருப்பார்; இதன் மூலம் அவர் பெயரிட்ட காருக்கு அவரே உரிமையாளார் ஆகும் தனித்துவமான வாய்ப்பை பெறுகிறார். மேலும் 10 வெற்றியாளர்களுக்கு ப்ராக் நகரில் உள்ள ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் மற்றும் ஸ்கோடா அருங்காட்சியம் மற்றும், அந்நகரை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பளிக்கப்படும்.

 ஐஸ் எஸ்யுவி-களுக்கு 'கே' என்ற எழுத்தில் தொடங்கி  ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களுடன் 'கியூ' என்ற எழுத்தில் முடிவடையும் விதமாக  பெயரிடுவது ஸ்கோடாவின் பாரம்பரியமாகும். அதற்கேற்ப   'நேம் யுவர் ஸ்கோடா' முன்முயற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் காம்பாக்ட் எஸ்யுவி-க்கான  பெயர்களை  பரிந்துரைத்தனர். இந்த முன்முயற்சியின் முடிவில் 24,000-க்கும்  மேற்பட்ட தனித்துவமான பெயர்களுடன் 200,000-க்கும் அதிகமான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

அடுத்த கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட  15 பெயர்களில் ஒன்றுக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப பங்கேற்பாளர்கள் வாக்களித்தனர். வாக்குகளின்  எண்ணிக்கையின்  அடிப்படையில் 10 பெயர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிவித்தது.  அந்த பட்டியலிலிருந்து, அதிக வாக்குகளைப் பெற்ற, மற்றும் அனைத்து சட்ட விதி வரம்புக்குள் வந்த  வெற்றிகரமான  பெயரானது, ஸ்கோடாவின் புத்தம் புதிய காம்பாக்ட் எஸ்யுவி காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. படிகம் என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து கைலாக் என்கிற பெயர் பெறப்பட்டது.

 இது ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிறிய ரக காம்பாக்ட் எஸ்யுவி  கார் பிரிவில் முதல் முயற்சியாக வெளியிடப்படுகிறது. எஸ்யுவி எம்கியூபி-ஏஒ-இன்  என்கிற பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட, இந்த கார் குஷாக் எஸ்யுவி  மற்றும் ஸ்லேவியா செடான் போன்றதாகும். உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்பவும், குறைந்த பராமரிப்பு செலவுகள் மற்றும்  உரிமையாளருக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் சௌகரியமான அனுபவத்தை வழங்குவது உள்ளிட்ட அம்சங்களில் இந்த கார் கவனம் செலுத்துகிறது.   

 இந்த காம்பாக்ட் எஸ்யுவி காரானது இந்தியாவில் ‘மார்டன் சாலிட் டிஸைன் லேங்குவேஜ்’-ஐ முதல் முறையாக அமல்படுத்துகிறது. இதில்  அதிக  கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும்  கரடுமுரடான சாலை மேற்பரப்புகளை சமாளிக்க ஏதுவாக சக்கரங்களைச் சுற்றி  போதிய இடவசதியும் உள்ளது. இதில் டிஆர்எல் லைட் சிக்நேச்சர், பக்கங்கள் மற்றும் பின்புறத்தில் அறுகோண வடிவ டிசைன்களுடன் வருகிறது.  இந்த காம்பாக்ட் எஸ்யுவி தற்போது இந்தியா முழுவதும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.  ஸ்கோடா கைலாக் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தால் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட மூன்றாவது புதிய தயாரிப்பாகும்.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் டைரக்டர், பீட்டர் ஜனேபா இந்த பெயர் வெளியீட்டு விழாவின்போது பேசுகையில், "எங்கள் புதிய எஸ்யுவி கைலாக் நமது இந்திய மக்களுக்கான ஒரு காராகும். இந்திய நாட்டில் இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான வாகன வெளியீட்டு நிகழ்வாகும், இது போன்ற  ஒவ்வொரு முக்கிய தருணங்களிலும் இந்திய மக்கள் எங்களோடு ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதன் காரணமாகவே, ‘நேம் யுவர் ஸ்கோடா’ என்கிற முன்முயற்சியினை மேற்கொண்டு, அதில் ஒரு பகுதியாக சாத்தியமான வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் பங்குபெற அழைத்தோம். ஒரு காருக்கு பெயரிடுவது என்பது எங்கள் நிறுவனத்திற்கு மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். மேலும் அனைத்திலும் புதிதாக நாங்கள் அறிமுகம் செய்யவுள்ள இந்த காம்பாக்ட் எஸ்யுவி காரானது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய மற்றும் மிகப்பெரிய வாகனப் பிரிவில் நாங்கள் எட்டியுள்ள முக்கிய நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. எங்கள் குடும்பத்தின் புதிய அங்கமான கைலாக் காரானது - நம் மக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் ரசிகர்கள் என அவர்களே வைத்த பெயருடன் வெளிவருகிறது. இந்த எஸ்யுவி-யானது இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அணிகளால் கூட்டாக  உருவாக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form