பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை கட்டணத்தைக் குறைத்துள்ளது அமேசான் இந்தியா



அமேசான் இந்தியா நிறுவனமானது பல தயாரிப்பு வகைகளுக்கு விற்பனை கட்டணங்களில் குறிப்பிடத்தக்க விலை குறைப்பை அறிவித்துள்ளது.  செப்டம்பர் 9, 2024 முதல், வரவிருக்கும் பண்டிகைக் காலத்துக்குத் தயாராகும் விற்பனையாளர்களுக்கு இந்தக் கட்டணக் குறைப்புகள் சரியான நேரத்தில் ஊக்கத்தை அளிக்கும். கட்டணங்களைக் குறைப்பதன் மூலம், அமேசான் அனைத்து விற்பனையாளர்களுடனும் தனது கூட்டாண்மையை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது அமேசான்.இன் இல் விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தவும், தங்கள் வணிகத்தை மேன்மேலும் வளர்க்கவும் உதவும். 

இந்த மாற்றங்களானது தற்காலிக நடவடிக்கைகள் அல்ல என்பதை அமேசான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தவிர, கட்டணக் குறைப்பு என்பதானது தீபாவளி ஷாப்பிங் நேரத்தில் விற்பனையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் மற்றும் பண்டிகைகளுக்கு அப்பால் நீடித்த வெற்றிக்கான களத்தை அமைக்கும்.

அமேசான் இந்தியாவில் விற்பனையாளர்கள் பல்வேறு தயாரிப்பு வகைகளில் 3 சதவிதம் முதல் 12 சதவிதம் வரையிலான விற்பனைக் கட்டணங்கள் குறைவதால் பயனடைவார்கள்.   புதிய கட்டண அட்டை அறிமுகமானது  குறிப்பாக ரூ.500க்கு கீழ் மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்யும்  விற்பனையாளர்களுக்கு பயனளிக்கும். உதாரணமாக, ரூ.299க்கு அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர், இப்போது குறைக்கப்பட்ட பரிந்துரைக் கட்டணமாக 2 சதவிதம் மட்டுமே செலுத்துவார், இது முந்தைய கட்டணமான 13.5 சதவிதத்திலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது சிறப்புக்குரியது. 

இதன் மூலம் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் ரூ.34 சேமிக்கலாம். இந்தக் கட்டணக் குறைப்புகளானது, வீட்டு அலங்காரம், உட்புற விளக்குகள், வீட்டுப் பொருட்கள்  மற்றும் பல இதுபோன்ற தயாரிப்புப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.

வெவ்வேறு விலை பட்டியலில் 59 துணைப் பிரிவுகளில் விற்பனையாளர் கட்டணங்களில் ஒட்டுமொத்தக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு, ஆடை மற்றும் சமையலறை போன்ற வகைகளில் அதிக கட்டண விலைகுறைப்பு உள்ளது. அதுமட்டுமின்றி வீடு, ஆடை, சமையலறை, வீட்டு மேம்பாடு, வயர்லெஸ் பாகங்கள், அலுவலகப் பொருட்கள், விளையாட்டு, காலணிகள், சாமான்கள், செல்லப் பிராணிகள், நகைகள், அழகு, கைக்கடிகாரங்கள் மற்றும் பிற தயாரிப்பு வகைகளுக்கு பொதுவான குறைந்த விலை குறைப்பு கட்டணமானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பூர்த்தி செய்யும் மையங்கள், விற்பனையாளர் ஃப்ளெக்ஸ் மற்றும் ஈஸி ஷிப் ஆகியவற்றிற்கான எடை கையாளுதல் கட்டணம் பொருந்தக்கூடிய ஸ்டெப் நிலைகளின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அமேசான் இந்தியாவின் விற்பனை கூட்டாளர் சேவைகளின் இயக்குனர் அமித் நந்தா, “கட்டணக் குறைப்பு நேரடியாக எங்கள் விற்பனையாளர்கள், குறிப்பாக சிறு வணிகங்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.  இதன் மூலம், அதிக விற்பனையாளர்களுக்கு உகந்த சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை நாங்கள் எடுத்து வருகிறோம். விற்பனையாளர்கள், குறிப்பாக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள், அமேசானில் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க குறைவை அனுபவிப்பார்கள். இது விரைவான வளர்ச்சிக்காக அவர்களின் வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்.  இந்த மாற்றங்கள் வரவிருக்கும் பண்டிகைக் காலத்திலும் அதற்கு அப்பாலும் எங்கள் விற்பனையாளர்களுக்கு முன்னோடியில்லாத முடிவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form