ஜீதமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் மகாநடிகை ஆடிசன் மதுரையில் நடைபெறுகிறது



தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ்.  பாடுவதில் ஆர்வமும் திறமையும் உள்ள குழந்தைகளுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி அவர்களுக்கான மேடையை வழங்கும் நோக்கில் ஒளிப்பரப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி மகாநடிகை என்ற புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது. நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண்களின் கனவை நனவாக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான  ஆடிஷன்கள்   திருவண்ணாமலையில் தொடங்கிய நிலையில் தற்போது மதுரையில் ஆடிசன் நடைபெறவுள்ளது. மகா நடிகை ஆடிஷனில் 18 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் எனவும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 ல் பங்கேற்க 6 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் மகாநடிகை ஆடிசன்  மதுரையில்  01.09.2024 ஞாயிற்று கிழமை அன்று அம்பிகா கலை மற்றும் அறிவியில் கல்லூரி, அண்ணா நகர் மெயின் ரோடு, அண்ணா நகர், சாத்தமங்கலம் என்னும் முகவரியில் நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் மாகநடிகை  நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். தேர்வாகும் போட்டியாளர்களுக்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான பல ரவுண்டிகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் இந்த பொன்னான வாய்ப்பை ஆர்வமும்,திறமையும் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் நோக்கில் ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form