போக்கோவின் புதிய டேப்லட் அறிமுகம்



வேகமாக வளர்ந்துவரும் இந்திய நுகர்வோர் தொழில்நுட்பத் துறையில் முன்னணி பிராண்டுகளுள் ஒன்றான போக்கோ இந்தியாவில் இன்று முதல் அதன் போக்கோ பேட் 5ஜி -யின் விற்பனையைத் துவங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட்டில் இந்த சாதனம் கிடைக்கும். இதன் மூலம், போக்கோ பிராண்டு இந்திய டேப்லெட் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இந்த புதிய சாதனப் பிரிவிற்கு அதன் அதிநவீன தொழில்நுட்பங்களையும், எவராலும் தரமுடியாத மதிப்பில் சாதனங்களை வழங்கும் திறனையும் ஒருசேர கொண்டு வந்துள்ளது.

போக்கோ பேட் 5ஜி   2.5கே ரெசொல்யூஷன் மற்றும் 120ஹர்ட்ஸ் அடாப்டிவ் சிங்க்  ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றின் மூலம் ஆச்சரியமூட்டும் காட்சி அனுபவத்தை வழங்குகிறது. டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சங்களுடன் வரும் இந்த சாதனம் - பயன்பாட்டாளரின் பயணத்தின்போது பொழுதுபோக்கவும், பணி சார்ந்த வேலைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. ஸ்நாப்டிராகன் 7எஸ் ஜென் 2 புராசஸரில் இயங்கும் இந்த அதிநவீன சாதனம் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யக்கூடிய 10000எம்எஎச் பேட்டரியுடன் வருகிறது. 

மேலும், போக்கோ ஸ்மார்ட் பென், போக்கோ கீபோர்டு மற்றும் ஒரு பேக் கேஸ் ஆகியவற்றுடன் கிடைக்கிறது. கூடுதலாக, போக்கோ பேட் ஆனது 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.

 பிஸ்தாசியோ கிரீன் மற்றும் கோபால்ட் ப்ளூ உள்ளிட்ட இரண்டு வகையான நிறங்களில் போக்கோ பேட் 5ஜி  கிடைக்கிறது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.3000/- தள்ளுபடி கிடைப்பதால், இளைஞர்களுக்கு இந்த டேப்லெட் அற்புதமான தேர்வாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், போக்கோ இதன் முதல் நாள் விற்பனையின் போது மாணவர்களுக்கென பிரத்தியேகமாக ரூ.1000/- கூடுதல் தள்ளுபடியையும் வழங்குவதால், போக்கோ பேட் 5ஜி -யின் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ரகத்தை ரூ.19,999*/-க்கும்; 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ரகத்தை ரூ.21,999*/-க்கும் வாங்கலாம். போக்கோ பேட் 5ஜி  அதன் முதல் 1500 வாடிக்கையாளர்களுக்கு 1 வருட டைம்ஸ் ப்ரைம் மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்குகிறது, மற்றும் எம்எஸ் ஆஃபீஸ் 365 சேவைக்கான 6 மாத சந்தாவையும் இலவசமாக அளிக்கிறது என போக்கோ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form