லிடியா 700சி சென்சாருடன் அறிமுகமாகும் மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூசன் ஸ்மார்ட்போன்இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆண்ட்ராய்டு பிராண்டான மோட்டோரோலா, அதன் பிரீமியம் எட்ஜ் ப்ரான்சைஸ் இன் கீழ் புத்தம் புதிய மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூசன்-ஐ அறிமுகப்படுத்தியது. மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூசன் ஸ்மார்ட்போன் அதன் பிரிவிலேயே மிகச்சிறந்த பல அம்சங்களுடன் 24கே க்கு கீழான ஸ்மார்ட்ஃபோன் சந்தைப் பிரிவை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூசன் ஸ்மார்ட்ஃபோன், மார்ஷ்மெல்லோ ப்ளூ வேகன் லெதர் ஃபினிஷ், வேகன் ஸ்வேட் ஃபினிஷில் ஹாட் பிங்க் மற்றும் ஃபினிஷில் ஃபாரஸ்ட் ப்ளூ. ஆகிய பிரமிக்கவைக்கும் மூன்று பாண்டோன் வண்ண வகைகளில் கிடைக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போன், 2024 மே 22 ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ரிலையன் டிஜிட்டல் உட்பட முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும். 8ஜிபி+128ஜிபி வகைக்கு அறிமுக விலையாக ரூ. 22,999 தள்ளுபடியுடன் இறுதி விலை ரூ. 20,999 ஆகும்.  12ஜிபி +256ஜிபி வகைக்கு அறிமுக விலையாக ரூ. 24,999 தள்ளுபடியுடன் இறுதி விலை ரூ. 22,999 ஆகும். ஐசிஐசிஐ வங்கி கிரடிட் கார்டுகள் மற்றும் கிரடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு உடனடி வங்கி தள்ளுபடி ரூ. 2000 கிடைக்கும்.

 இந்த பிரிவிலேயே மிகக் குறைவான எடையுடன் அல்ட்ரா-தின் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூசன் எடை வெறும் 175 கிராமும் தடிமன் வெறும் 7.9 மிமீ அளவே கொண்டது. பிரிவிலேயே மிக மேம்பட்ட சோனி லிடியா எல்ஒய்டி-700சி சென்சார் தொழில்நுட்பம், 50எம்பி 2.0எம்எம் அல்ட்ரா பிக்சல் திறன் கொண்ட மெயின் ஓஐஎஸ் கேமரா, 13எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா, இரண்டு பின்புற கேமரா, 4கே வீடியோ பதிவுக்கு ஆதரவாக 32எம்பி குவாட் பிக்சல் தொழில்நுட்ப செல்ஃபி கேமரா, காட்சிகள் தொடர்ந்து தடையில்லாமல் இயங்குவதற்கு ஸ்மார்ட் வாட்டர் டச் தொழில்நுட்பத்துடன் ஐபி 68 நீர் எதிர்ப்புத் திறன், கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, உட்சபட்ச 1600 நிட்ஸ் பிரகாசத்துடனும் இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த 144ஹட்ஸ் 10-பிட் போலெட் வளைவான டிஸ்ப்ளே, இன்ஃபினிட் கான்ட்ராஸ்ட் மற்றும் சினிமாட்டிக் வண்ணங்களுடனான 6.67 இன்ச் அகல போலெட் காட்சியமைப்பு,144ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. 

ஸ்நாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசசர் 630கே வரையிலான ஆன்டுடு மதிப்பெண்ணை எட்டும் 4என்எம்  சிப்செட் ஆற்றல் மிக்கவகையில் இயக்குகிறது. இது 15 5ஜி வரையிலான பேண்டுகள் மற்றும் வைஃபை 6 க்கு ஆதரவளிக்கிறது.

மேலும் இது 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 68வாட் டர்போபவர் சார்ஜர்,, ஹை-ரெஸ் ஆடியோவுடனான டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்,   அதி நவீன ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹெல்லோ யுஐ,  3 ஓஎஸ் புத்தாக்கங்கள், 4 வருட பாதுகாப்பு புத்தாக்கங்களுக்கான உத்திரவாதத்துடன் பல்வேறு மென்பொருள் அனுபவங்கள், ரெடி ஃபார் தொழில்நுட்பம், திங்க்‌ஷீல்ட் உடனான மோட்டோ செக்யூர் உற்பத்தியிடத்திலிருந்து தொடங்கி தொலைபேசி வரை ஒவ்வொரு மட்டத்திலும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

இதன் அறிமுகம் குறித்து பேசிய. மோட்டோரோலா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டி.எம் நரசிம்மன், " மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூசன் தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். பயன்தரத்தக்க புத்தாக்கங்களை வழங்குவதில் எங்களுக்குள்ள தீவிர கவனக் குவியத்தை பிரதிபலிக்கும் வகையில் எட்ஜ் 50 ஃப்யூசன் இல் அடங்கியுள்ள விதிவிலக்கான கேமரா மற்றும் அதன் புத்தம் புதிய அற்புதமான வடிவமைப்பு ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தித் துறையில் ஒரு புதிய தரவறையை நிர்ணயித்திருக்கிறது.  எட்ஜ் 50 ஃப்யூசன்  எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இருக்கும் மற்றும் நுகர்வோர் மீது நீடித்த நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form