கேடிஎம் உடன் இணைந்த சியட் டயர்ஸ்



அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு புகழ்பெற்ற முன்னணி டயர் உற்பத்தியாளரான சியட் டயர்ஸ், கேடிஎம் ஆர்சி கப் சீசன் 2 உடன் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிற்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சியட்-ன் பயணத்தில் இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. கேடிஎம் ஆர்சி கப், சிறந்த பந்தயங்கள் மற்றும் விதிவிலக்கான திறமைகளுக்கு பெயர் பெற்றது. 

சியட் டயர்ஸின் மேம்பட்ட டயர் தொழில்நுட்பத்தில் இருந்து சிறந்த பிடிப்பு, மேம்பட்ட செயல்திறன் மற்றும் ஒப்பிடமுடியாத நீடித்துழைப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சியட் டயர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சியட் ஸ்டீல் ஸ்போர்ட் ராட் டயர்களை பந்தயத்திற்குவழங்கியுள்ளன. இது குறிப்பாக அதிவேக பந்தயத்தின் கடுமையான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பந்தய வீரரும் பாதையில் தங்கள் அதிகபட்ச திறனை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

KTM உடனான கூட்டாண்மை பற்றிப் பேசுகையில், சியட் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லக்ஷ்மி நாராயணன் பி, "கேடிஎம் ஆர்சி கப் சீசன் 2 உடன் ரேசிங் பங்குதாரராக இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் சமீபத்தில் ஸ்டீல் ஸ்போர்ட் ராட் டயர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டயர் எங்கள் சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்டது. இந்த சீசன் முழுவதும் ஸ்டீல் ஸ்போர்ட் ராட் டயர்களே அனைத்து பைக்கிளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் டயர்களுக்கு குளோபல் டெஸ்டிங் அண்ட் டெவலப்மென்ட் ஆலோசகர் ஜெர்மி மெக்வில்லியம்ஸ் மற்றும் கஸ்டோ ரேசிங்கை உருவாக்கிய இம்மானுவேல் ஜெபராஜ் மற்றும் அனைத்து ரைடர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ரைடர்கள் மிகவும் வசதியாகவும், நம்பிக்கையுடனும், சுமுகமாகவும் ரைட்களை மேற்கொண்டனர். எங்கள் டயர்களின் செயல்திறனுக்கு இதுவே சான்றாகும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form