டீலர்களுக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை, இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த்துள்ளன.
இந்த கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைமை நிதி அதிகாரி திமான் குப்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் லிமிடெட் இயக்குனர் சித்தார்த்தா பட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைமை வணிக அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் சேவைக் குழுக்களில் ஒன்றானது, அதன் பயணிகள் மற்றும் மின்சார வாகன விற்பனையாளர்களுக்கான விநியோக சங்கிலி நிதி தீர்வுகளை விரிவுபடுத்துகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பங்குபெறும் நிறுவனங்கள் டிஎம்பிவி மற்றும் டிபிஇஎம் நிதிப்பயனீடுகளைக் குறைந்தபட்ச உத்திரவாதங்களுடன் வழங்குவதற்காக பஜாஜ் ஃபைனான்ஸின் பரந்த அணுகலைப் பயன்படுத்த ஒன்றிணைந்து செயல்படும்.
கூட்டாண்மை குறித்து, டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைமை நிதி அதிகாரியும், டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிகிள்ஸ் லிமிடெட் இயக்குநருமான திமன் குப்தா கூறுகையில், “எங்கள் டீலர் பார்ட்னர்கள் எங்கள் வணிகத்துடன் ஒருங்கிணைந்தவர்கள், எளிதாக வணிகம் செய்ய அவர்களுக்கு உதவும் வகையிலான தீர்வுகளை அடையச்செய்ய தீவிரமாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதித் திட்டத்திற்காக பஜாஜ் ஃபைனான்ஸுடன் பார்ட்னராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் டீலர் பார்ட்னர்களின் அதிகரித்த செயல்பாட்டு மூலதனத்திற்கான அணுகலை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.
இந்த கூட்டாண்மை குறித்து பேசிய பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் துணை நிர்வாக இயக்குனர் அனுப் சஹா, “இந்த நிதித் திட்டத்தின் மூலம், டிஎம்பிவி மற்றும் டிபிஇஎம்-ன் அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் மற்றும் மின்சார வாகன விநியோகஸ்தர்களை நிதி மூலதனத்துடன் இணைப்போம். இந்த ஒத்துழைப்பு டீலர்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அதை மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.