ரூ 19,13,400/-க்கு அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன்



ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதல் தயாரிப்பு நடவடிக்கையாக, அதிக விற்பனையாகும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பான, கிராஷ்-டெஸ்ட்  செடானின், ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.  ஸ்டைல் எடிஷனின் 500 அலகுகளை ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்துகிறது. அனைத்து 500 அலகுகளிலும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின் திறனில் இயங்கும் 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.   

500 மகிழுந்துகள் ஒவ்வொன்றும் கேண்டி வொயிட், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் டொர்னாடோ ரெட் ஆகிய வண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஸ்லேவியா செடான் ஸ்டைல் வேரியண்டுக்கு இணையான விலையை விடவும்,  ரூ 30,000/- மட்டுமே கூடுதலாகும்.   இதன் விலை ரூ 19,13,400/- ஆகும்.

ஸ்லேவியாவின் ஸ்டைல் வேரியண்ட் டாப்-ஆஃப்-தி-லைன் அடிப்படையில், ட்யூயல் டேஷ் கேமரா, பிளாக்ட் அவுட் பி-பில்லர்கள், பிளாக் கண்ணாடி கவர்கள், பிளாக் ரூஃப் ஃபாயில் ஆகியவற்றின் மீது ’எடிஷன்‘ பேட்ஜ்,  ‘ஸ்லேவியா‘ பிராண்டெட் ஸ்கஃப் பிளேட் ஸ்டீரிங்கில் ‘எடிஷன்‘ பேட்ஜ், 6 ஏர்பேக் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் ஸ்டைல் எடிஷன் அறிமுகமாகிறது.  95 சதவிதம் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மகிழுந்து 4 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ நிலையான உத்தரவாதம் மற்றும் 8 ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ வரை விருப்ப உத்தரவாதம், ஏராளமான பராமரிப்பு, சேவைத் தொகுப்புகளை வழங்குகிறது.

தயாரிப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜெனேபா கூறுகையில் ‘ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன், எங்கள் பெருமைமிகு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க, மிகவும் பிரத்யேகமான, அதிக மதிப்புள்ள பொருளை நாங்கள் வழங்குவதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு ஆகும். குறிப்பிட்ட சில வாடிக்கையளர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்கான மிகவும் குறைந்த எண்ணிக்கையில் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்துகிறோம். ஆனாலும், இந்தியா முழுவதும் 200க்கும் அதிகமான விற்பனை டச் பாயிண்ட்களில் லிமிடெட் எடிஷன் கிடைக்கும்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form