மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவின் மிகச்சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா தனது புத்தம் புதிய மலிவு விலை  ஸ்மார்ட்ஃபோன் மோட்டோ ஜி04 ஐ அறிமுகப்படுத்தியது. பிரீமியம் வடிவமைப்புடன் அக்ரிலிக் கிளாஸ் ஃபினிஷ் உடன் வரும் இது கான்கார்ட் பிளாக், சீ கிரீன், சாடின் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு   ஆகிய    4 கவர்ச்சிகரமான கண்ணைக் கவரும்  வண்ணங்களில் கிடைக்கும். 

இது  4ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி என்ற இரு வேறு அளவிலான நினைவகம் மற்றும் சேமிப்பகத்துடன்  கிடைக்கும். ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில்   2024 பிப்ரவரி 2024,  அன்று மதியம் 12 மணி  முதல் விற்பனைக்கு வரும். 4ஜிபி ரேம் + 64 ஜிபி விலை ரூ. 6,999 மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ரூ. 7,999 ஆகும்.

 இந்தக் கருவி 7.99 மிமீ பரிமானத்துடன் வெறும் 178 கிராம் எடையையும் கொண்டு இந்தப் பிரிவிலேயே மிக மிக மெலிதான மிகக் குறைந்த எடை கொண்ட  ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும், அதை  எளிதாகவும் வேகமாகவும் அன்லாக் செய்வதை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர் உறுதிசெய்கிறது. இதன் 5000எம்எஎச் பேட்டரி 15வாட் சார்ஜிங் வேகத்துக்கு ஆதரவளிக்கிறது.  ஐபி52  நீர் எதிர்ப்புத் திறன் மதிப்பீட்டுடன் கூடிய வடிவமைப்பு மற்றும் தானியங்கி ஏஐ மேம்பாட்டு வசதிகளின்  உதவியோடு அழகான காட்சிகளை படம்பிடிக்க உதவும் வகையில் 16எம்பி ஏஐ - இயக்க கேமிரா பொருத்தப்பட்டு வருகிறது. 5எம்பி முன்புற கேமராவின் உதவியோடு ஒவ்வொரு முறையும் சமூக ஊடகத்துக்குகந்த சிறந்த செல்ஃபிக்களை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்துகொள்ளலாம்.

சக்திவாய்ந்த டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆதரவோடு ஹை ப்ரைட்னஸ் மோட் உடன்  கூடிய  பன்ச்-ஹோல் 16.66 செமீ 90 ஹர்ட்ஸ் டிஸ்ப்ளே  மூலம் பயனர்கள் பல பரிமாண ஒலி ஒளிக்  காட்சி அனுபவத்தை பெற முடியும். மோட்டோ ஜி04, இதன் பிரிவுகளிலேயே ஆண்ட்ராய்ட்14 இயங்குதளத்துடன் வரும் ஒரே ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இதன் ஹெல்த் கனெக்ட் அம்சமானது, பல்வேறு ஃபிட்னஸ் ஆப்ஸ்களிலிருந்தும்  அனைத்து தரவுகளையும் ஒரே இடத்தில் இணைத்து ஒத்திசைந்து இயங்கச்செய்யும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. ஃபிளாஷ் நோட்டிஃபிகேஷன் உள்வரும் அழைப்புகளுக்கு ஃபிளாஷ் மற்றும் ஸ்கிரீன் லைட்டை பயனர்கள் இயக்குவதன் மூலம் இது பயனர்களுக்கு அது குறித்து அறிவிக்கும். இது 8ஜிபி / 4ஜிபி ரேம் உள்ளமைப்புடன் வருகிறது. 

இதன் ரேம் பூஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தி அதை 16ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம். யுனிசாக் டி606 சிப்செட் மற்றும் யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் மோட்டோ ஜி04 பல்பணியை தடையின்றி மேற்கொள்ள உதவுகிறது. மோட்டோ ஜி04, 64ஜிபி மற்றும் 128ஜிபி என்ற அளவில் இருவேறு  சேமிப்பக விருப்பத்தேர்வை  வழங்குகிறது, மேலும்  ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக சேமிப்பகத்தை  1டிபி அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம் மேலும் இதில் மூன்று சிம் கார்டுகளுக்கான  ஸ்லாட்டுகளையும் கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form