ரூ. 8249க்கு அறிமுகமாகும் மோட்டோ ஜி24 பவர்ஃபோன்

மோட்டோரோலா,  அதன்  ஜி சீரீஸ் ஃப்ரான்ச்சைஸ் வரிசையில்  சமீபத்திய அடிப்படை-தொடக்க நிலை ஸ்மார்ட்ஃபோன் மோட்டோ ஜி24 பவர்-ஐ அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது.  3டி அக்ரிலிக் கிளாஸ்  ஃபினிஷ் அம்சத்துடன் இங்க் ப்ளூ மற்றும் கிளேசியர் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும். மோட்டோ ஜி24 பவர் 4ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி  உள்ளக சேமிப்பகத்துடன்  இரு வேறு நினைவக வகைகளில்  ஃப்ளிப்கார்ட் மோட்டோரோலா.இன் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் 7 பிப்ரவரி 2024, அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் : ரூ. 8,999க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் : ரூ. 9,999க்கும் கிடைக்கும்.  

எக்ஸ்சேஞ்ச் இன் போது கூடுதலாக ரூ.  750 தள்ளுபடி கிடைக்கிறது. சலுகைகளுடனான இறுதி விலையாக 4ஜிபி + 128ஜிபி ரூ. 8,249க்கும், 8ஜிபி + 128ஜிபி ரூ.  9,249க்கும் கிடைக்கும்.  உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் வசதி மூலம் 128ஜிபி வரையிலான  சேமித்து வைக்க  போதுமான இடத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தனிப்பட்ட மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி 1டிபி வரை சேமிப்பகத்தை  விரிவாக்கும் வசதிமூலம் பயனர்கள் பயனடையலாம்.

மோட்டோ ஜி24 பவர்-ன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர்  கருவியை எளிதாகவும்  மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு உதவுவதோடு   அதன் மெலிதான மற்றும் வலுவான வடிவமைப்புக்கு ஒரு நிறைவான தோற்றத்தை அளிக்கிறது. மிகக் குறைந்த  8.99 மிமீ தடிமன் அளவும்  மற்றும் 197 கிராம் எடையும் மட்டுமே கொண்ட , இந்த மென்மையான  பளபளப்பான ஸ்மார்ட்போன் நீர்-எதிர்ப்புத் திறன் கொண்ட வடிவமைப்பு ஐபி 52 மதிப்பீட்டளவுடன் வருகிறது. ஒரு ஆற்றல்மிக்க பிரமாண்டமான 6000எம்எஎச் பேட்டரியை  இந்த  ஃபோன் கொண்டுள்ளது. 

டர்போ பவர் 33வாட் சார்ஜர், புத்தம் புதிய ஆண்ட்ராய்ட் 14 இயங்குதளத்துடன் பாதுகாப்பு புத்தாக்கங்களுக்கு 3 வருட உத்திரவாதத்துடன்  வருகிறது. ஃப்ளாஷ் நோட்டிஃபிகேஷன், ஃபிளாஷ் மற்றும் ஸ்கிரீன் லைட் இயக்கம்,  ஹெல்த் கனெக்ட் அம்சம், மேம்படுத்தப்பட்ட உருப்பெருக்கவசதி , தரவு பகிர்வு புத்தாக்கங்கள்  மற்றும் மேம்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

மோட்டோ ஜி24 பவர்  மேம்பட்ட 50 எம்பி குவாட் பிக்சல் கேமரா அமைப்புக்கு  ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இதன் தனிப்பயனாக்க மேக்ரோ விஷன் கேமரா பயனர்களை அவர்களின் குறியிலக்குக்கு மிக அருகாமையில் 4 செமீ இடைவெளிக்குள் நெருங்கி வந்து வழக்கமான லென்ஸ் மூலம் சிறு சிறு விவரங்களை துல்லியமாக காட்சிப்படுத்த உதவுகிறது. இந்தப் பிரிவிலேயே தலைசிறந்த 16எம்பி திறன் கொண்ட முன்புறக் கேமிராவை இந்த ஸ்மார்ட்ஃபோன் கொண்டுள்ளது.  

மோட்டோ ஜி24 பவர் ஃபோன் அதன் நாட்ச்லெஸ் 6.6இன்ச் 90 ஹர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே  திரை காரணமாக உட்சபட்சமாக 537 நிட்ஸ் பிரகாசத்தை அளித்து நம்பமுடியாத பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. மேலும், உயரிய அளவில் 90 ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன், ஆப்ஸ் மற்றும் இணையதளங்களுக்கு இடையே ஸ்க்ரோலிங் செய்வது மாறுவது போன்ற செயல்பாடுகளை தடையில்லாமல் மென்மையாகவும் எளிதாகவும் மேற்கொள்ளமுடியும். இது  டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களால் மேலும் மேம்படுத்தப்படுகிறது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த. மொபைல் பிசினஸ் குரூப்-இந்தியாவின் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் கூறியதாவது , "எங்கள் ஜி சீரீஸ் ஃப்ரான்ச்சைஸ் வரிசையில்  சமீபத்திய சேர்க்கையான  மோட்டோ ஜி24 பவர்-ன் அறிமுகம் குறித்து அறிவிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். பிரீமியம் வடிவமைப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய  பேட்டரி மற்றும் இதர பல தலைசிறந்த சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மிகவும் எளிதாக  அணுகக்கூடிய விலையில் அதிநவீன மற்றும் செயல்திறன் மிக்க அனுபவத்தை  தடையின்றி பெற்று மகிழ உதவுகிறது” என்றார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form