ரொக்கப்பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட்ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் - சென்னை, தற்போது தனது 6வது ஆண்டு வழிகாட்டி விழாவை வருடாந்திர பாராட்டு நிகழ்ச்சியான - ”சோபன்” உடன் கொண்டாடியது. பல்வேறு ஒலிம்பியாட்ஸ், ஐஐடி ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) ஆகிய தேர்வுகளில் தேசிய அங்கீகாரம் பெற்ற மாணவர்களை இந்த நிகழ்வில் கெளரவித்தது. சென்னையில் சோபன் - ன் மூன்றாவது பதிப்பைக் குறிக்கும் வகையில், ஜனவரி 27, 2024 அன்று சென்னை காமராஜர் அரங்கில் விழா நடைபெற்றது.

சோபன் -ன் இந்த பதிப்பில், வழிகாட்டுதலின் பயணம், சாராம்சம், தத்துவம் மற்றும் மகிழ்ச்சியான வெற்றியை நினைவுகூரும் ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டது. நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காலையில், ஒலிம்பியாட்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஜேஇஇ 2023 மற்றும் ஐஐடி ஜேஇஇ 2023-ல் முதல் ரேங்க்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில், நீட்(யுஜி) 2023 இல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் உள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

 இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்களும், தாளாளர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பாராட்டினர். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆலன் மாணவர்கள் பரதநாட்டியம் முதல் நடன நிகழ்ச்சிகள் மற்றும் வாத்தியக் கருவிகள் வரை பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில்   மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி மோகன்,எம்டி, எஃப்ஆர்சிபி (லண்டன்),பிஎச்டி., டாக்டர், ஓய்வுபெற்ற கூடுதல் துணை ஆணையர் ஏ.டி. மோகன் ராஜ், ஆவடி சிஒபி  கே ஷங்கர், பி டெக் மெக்கானிக்கல் ஐஐடி மெட்ராஸ்,  வருவாய்த் துறை, வருமான வரி ஆணையர், வி. நந்த குமார், ஆலன் தென்னிந்தியாவின் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ்,ஆலன் தமிழ்நாடு மையங்களின் தலைவர், சந்தோஷ் சிங் பங்கேற்றனர். நிறுவனத்தின் பிற தலைவர்களும் ஆசிரியர்களும் உடனிருந்தனர். 

புகழ்பெற்ற குழந்தை உளவியலாளர், உளவியல் நிபுணர், குழந்தை வளர்ப்பு மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் மற்றும் தொழில் ஆலோசகர் டாக்டர். ஹரிஷ் ஷர்மா, சிறந்த சாதனையாளர்கள் மற்றும் வருங்கால சாதனையாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை மற்றும் தேர்வுகளின் போது கவனத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஒரு அமர்வை நடத்தினார்.

ஆலன் ஆனது, தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பூஜை-செய்யப்பட்ட தூய்மையான வெள்ளிப் பதக்கங்களை கொடுத்து அவர்களை பாராட்டும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சோபன்-ன் இந்த பதிப்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 624 மாணவர்கள் இரு அமர்வுகளிலும் பாராட்டப்பட்டனர். பல்வேறு ஒலிம்பியாட்ஸ், ஐஐடி ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) 2023 இல் சூப்பர் சாதனையாளர்களுக்கு இந்த சோபன் பதிப்பில் ரொக்கப் பரிசுகள், நினைவு பரிசுகள் மற்றும் வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. 

பல்வேறு ஒலிம்பியாட் போட்டிகளில் தகுதிபெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த 31 மாணவர்களுக்கு ரூ.2,70,600-த்திற்கான ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. 14 ஐஐடி-ஜேஇஇ 2023 சூப்பர் சாதனையாளர்களுக்கு ரூ. 5,12,500 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.  இந்த சந்தர்ப்பத்தில், தற்போது ஏஐஐஎம்எஸ் நாக்பூரில் படிக்கும் ஆலன் சென்னையின் முன்னாள் மாணவியான தேஜஸ்வர்த்தினி, நாக்பூரிலிருந்து வந்து எதிர்காலப் போட்டிகளில் முத்திரை பதிக்க விரும்பும் மாணவர்களை ஊக்குவித்தார் மற்றும் மருத்துவக் கல்லூரியின் வாழ்க்கை பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஆலன் தென்னிந்தியாவின் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ் பேசுகையில், "ஆலன் சென்னை ஆசிரியர்கள் சென்னை மாணவர்களை சிறந்தவர்களாக  உருவாக்க மிகவும் அர்பணிப்போடு செயல்படுகின்றனர். மாணவர்கள்  ஒலிம்பியாட்ஸில் தேர்ச்சி பெற்று மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அவர்களுக்கு குருதக்‌ஷனையை வழங்குகின்றனர்” என்றார்.

ஆலன் தமிழ்நாடு மையங்களின் தலைவர் சந்தோஷ் சிங் பேசுகையில்,  "ஆலனின் வழிகாட்டுதல் தத்துவமும் அதன் சாராம்சமும் சென்னையின் திறமையால் பெருமளவில் வெளிப்படுகிறது. எங்கள் தலைமை வளாகம் ஆலன் பெங்களூர் மற்றும் ஆலன் கோட்டா எப்போதும் எங்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து வழிகாட்டுதலின் கொடியை உயரப் பறக்க வைக்க இடைவிடாத ஆதரவை வழங்குவதற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form