ஜேகே டயர்ஸ் அறிமுகப்படுத்தும் ஷிக்ஷாசார்த்தி ஸ்காலர்ஷிப் திட்டம்


கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை நோக்கிய   ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில்  ஜேகே டயர் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கனரக மோட்டார் வாகன ஓட்டுநர்களின் மகள்களுக்காக, பிரத்யேகமாக 'ஜேகே டயர் ஷிக்ஷாசார்த்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை' அறிமுகப்படுத்த டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் மற்றும் புரோடீன் வித்யாத்சார்த்தி ஆகியோருடன் இணைந்துள்ளது. 

இந்த முன்முயற்சியானது, கார்ப்பரேட் சமூகப் பொறுப்பில் ஜேகே டயரின் அர்ப்பணிப்பை முக்கியப்படுத்திக்  காட்டுகிறது மற்றும் ஓட்டுநரின் பெண் குழந்தைக்கு  தரமான கல்வி கிடைக்கச் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த புதிதாக தொடங்கப்பட்ட உதவித்தொகை  திட்டம், ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை நிதி உதவி வழங்குகின்ற வகையில் பல்வேறு இளங்கலை படிப்புகளுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பண உதவியானது தகுதியான மாணவர்கள் தங்கள் கல்வி இலக்குகளைத்  தடையின்றி தொடர அனுமதிக்கின்ற வகையில் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குடும்பங்களின் நிதிச் சுமையைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஜேகே டயர் ஷிக்ஷாசார்த்தி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை   நடைமுறைப்படுத்துகின்ற ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையானது www.vidyasaarthi.co.in <http://www.vidyasaarthi.co.in>  இணையதளத்தில்  அணுகக் கிடைக்கிறது.  

இந்த உதவித்தொகை  திட்டத்தின் கூட்டுழைப்பு  மற்றும் துவக்கம் குறித்து ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரகுபதி சிங்கானியா கூறுகையில், ”ஜேகே டயர்-ல் நாங்கள், போக்குவரத்து துறைக்கு  வணிக வாகன ஓட்டுநர்கள் ஆற்றி வருகிற  விலைமதிப்பற்ற பங்களிப்பை  அங்கீகரிக்கிறோம் மற்றும் அவர்களின்  மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வுக்கான எங்கள் அற்பணிப்பு  எங்கள் வணிக நலன்களுக்கு அப்பாற்பட்டு விரைவடைகிறது. ஜேகே டயர் ஷிக்ஷா சார்த்தி ஸ்காலர்ஷிப் திட்டம் என்பது நிதி உதவி மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும், மேலும் இந்த முயற்சியை நனவாக்க டிஐஎஸ்எஸ் மற்றும் புரோட்டீன் வித்யாட்சார்த்தி ஆகியோருடன்  கூட்டு சேர்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்"என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form