எஸ்எம்எஃப்ஜி நிறுவனம் ஒரே நாளில் 1 லட்சம் கால்நடைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கியது



இந்தியாவின் முன்னணி என்பிஎஃப்சி-க்களில் ஒன்றான எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் கோ. லிமிடெட் , தங்களின் நாடு முழுவதும் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் கால்நடை பராமரிப்பு முகாமான 6வது பசுவிகாஸ் தினத்தை நடத்தியது. இந்த முகாம்கள் 14  மாநிலங்களில் உள்ள 460 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன மேலும் 1 இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகளுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன.   

இந்தியாவில், 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பால் துறையுடன் நேரடியாக தொடர்புடையவை மற்றும்  70 சதவிகிதம் தொழிலாளர்களில் பெண்கள் அடங்குகின்றனர். இந்த பெண்களின் முயற்சிகளை நினைவுகூரும் வகையில், 6வது பசுவிகாஸ் தினம் ‘பால் பண்ணைத் தொழிலில் பெண்கள்’ என கொண்டாடப்பட்டது.

கால்நடை பராமரிப்பு தவிர, எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட், 2024 பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை நாடு முழுவதும் உள்ள சமூகத்திற்காக, 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகின்ற வகையில் 300 க்கும் மேற்பட்ட உடல்நல பாதுகாப்பு முகாம்களையும்  ஏற்பாடு செய்தது.  6 வது பசு விகாஸ் தினம்  1,25,000 க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைகளில்   முழுவதும் சென்றடைந்து  விளைவு ஏற்படுத்தியது.

 பசுவிகாஸ் தினமானது, இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக ஒரே நாளில் தாமாக முன்வந்து ஒன்றிணைந்த நாடு முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் தீவிரமான பங்கேற்பையும் கண்டது.இந்த ஆண்டு, வேர்ல்டு ரெகார்ட்ஸ் யூனியன் உடன் நாடு முழுவதும் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் கால்நடை பராமரிப்பு முகாம்களுக்கான ஒரு புதிய சாதனையை இந்த நிறுவனம் படைத்துள்ளது.

நிறுவனத்தின் சமூக முன்முயற்சிகள் பற்றி பேசிய எஸ் எம் எஃப்ஜி-ன் இந்தியா கிரெடிட் இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷாந்தனு மித்ரா, "எங்கள் கிராமப்புற வாடிக்கையாளர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கிறார்கள். எங்கள் வாடிக்கையாளர்களில் பலர்  அவர்களுக்கு பெரிய வருமான ஆதாரமாக உள்ள கால்நடைகளை வாங்குவதற்கு கடன் வாங்குகிறார்கள். எங்கள் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மாற்றத்திற்கான ஊக்கியாக செயல்படுகின்றன. எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் இல், புதுமையான மற்றும் நிலையான சமூக-பொருளாதார முன் முயற்சிகள் மூலம் பின்தங்கிய சமூகங்களில் உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்"என தெரிவித்தார்.

பசுவிகாஸ் தினம் பற்றி  கருத்து தெரிவிக்கையில், எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் இன்  தலைமை இயக்க அதிகாரி சுவாமிநாதன் சுப்ரமணியன், ” பசுவிகாஸ் தினம் குறிப்பாக கிராமப்புறங்களில் கால்நடைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கால்நடை உரிமையாளர்களின் அபிலாஷைகளை வலுப்படுத்துகிறது மற்றும் கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, தொடர்ந்து வீட்டு வருமானத்தை உயர்த்துகிறது"என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form