ஸ்கோடா இந்தியா 250 டச்பாயிண்ட்களை நிறுவி லேண்ட்மார்க் சாதனைஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியா முழுவதும் 250 வாடிக்கையாளர் டச்பாயிண்ட் வலையமைவை விரிவுபடுத்தும் லேண்ட்மார்க் சாதனையை எட்டியுள்ளது. நிறுவனத்தின் அதிக விற்பனை ஆகும் மகிழுந்துகளான குஷாக் எஸ்யூவி மற்றும் ஸ்லேவியா செடான் ஆகியவை இந்தியாவின் ஸ்கோடா பிராண்ட் வளர்ச்சிக்குக் காரணமாக விளங்குகின்றன. இத்துடன், வாடிக்கையாளரை மையப்படுத்தும் லேசர் முனைபோல் தீவிர கவனத்தில் வலையமைவு விரிவாக்கம் முக்கியப் பங்களிக்கிறது.

லேண்ட்மார்க் சாதனை குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘எங்களது 250ஆவது வாடிக்கையாளர் டச்பாயிண்ட் எண்ணிக்கை அடிப்படையில் லேண்ட்மார்க் சாதனை என்பதுடன், நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளோம். எங்கள் வலையமைவைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன், எங்கள் வாடிக்கையாளரின் உரிமை அனுபவத்தை மேம்படுத்துவோம். 250ஆவது வாடிக்கையாளர் டச்பாயிண்ட்டை லேண்ட்மார்க் கருநாடகம் குல்பர்காவிலுள்ள விற்பனை அவுட்லெட் தொடக்கம் மூலம் எட்டினோம்.  ஸ்கோடா ஆட்டோ இந்தியா இன்னும் விரிவாக்க முனைவுகளில் ஈடுபட்டு, 2024க்குள் வாடிக்கையாளர் டச்பாயிண்ட்களை 350ஆக உயர்த்துவோம். ’ என்றார்.

கணிசமான வலையமைவு விரிவாக்கத்துடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா பாதுகாப்பு, குடும்பம், ஹ்யூமன் டச் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.  புரட்சிகரமான, அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட டிஜிடல்மயமாக்கப்பட்ட ஷோரூம்களை அமைத்து வாடிக்கையாளரின் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. நிலை வாரண்டியாக 4 ஆண்டுகள் / 100000 கிமி இரண்டில் எது முதலோ அத்துடன், 8 ஆண்டுகள் / 150000 கிமீ சிக்கலற்ற வாரண்டிகள் மற்றும் பராமரிப்பு பேக்கேஜ்களை வழங்குகிறது.  இவற்றுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், ஃப்ரீ ஓண்ட் கார் வசதிகள், ஆகியவற்றையும் இந்தியச் சந்தைக்கு அளிக்கும் வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post

Contact Form