5175க்கும் மேலான சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு நிதியறிவு குறித்து கேஎம்எஃப் விழிப்புணர்வு

 ‘பணத்தின் பாஷையைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற ஒரு முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முன்முயற்சியைக் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட், சென்னையில் சென்ட்ரல் போர்ட் ஆஃப் செக்கண்டரி எஜுகேஷனுடன்  இணைந்து நடத்தியது. ஆசிரியர்களின் நிதி தொடர்பான புரிதலை வளர்ப்பதற்கு உதவியாக அவர்களை வலிமைப்படுத்துவதையும் அதன் மூலம் இறுதியில் இந்தியாவின் சாத்தியமான எதிர்கால முன்னேற்றப் பயணத்திற்கு பங்களிக்க அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்து நடத்தி நிதி தொடர்பான அறிவை வளர்க்க இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 5175 க்கும் மேலான சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கும் சென்னையில் இருக்கும் 2625 க்கும் மேலான ஆசிரியர்களுக்கும் நிதி பற்றிய அறிவைப் புகட்டி விழிப்புணர்வை உருவாக்குவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இவர்களில் 50 சதவிகித பேர் பெண்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமமான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. செண்டர் ஃபார் இன்வெஸ்மெண்ட் எஜூகேஷன் அண்ட் லேர்னிங்-ஐ  சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திறமையான பயிற்சியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை கோட்டக் மியூச்சுவல் பண்ட் நடத்துகிறது.

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் டிஜிட்டல் பிசினஸ், மார்க்கெட்டிங் மற்றும் அனலிட்டிக்ஸ் தலைவர் கிஞ்சல் ஷா, “இந்தப் ‘பணத்தின் பாஷையைக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முன்முயற்சியின் மூலம் நிதி சார்ந்த வலிமையை உருவாக்குவதற்கு நாங்கள் அதிக உறுதியைப் பெற்றுள்ளோம். நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதிலும் புதிய தலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று நாங்கள் நம்புகிறோம். பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு நிதியையும் முதலீட்டையும் பற்றிய அறிவைப் புகட்டி விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவே நாங்கள் சிபிஎஸ்இ-உடன் இணைந்துள்ளோம். நிதி பற்றிய விழிப்புணர்வு கொண்ட ஆசிரியர்கள் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் ஓர் எதிர்காலத்தை நாம் இணைந்து உருவாக்கலாம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form