விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் அமேசானின் புதிய திட்டங்கள் அறிமுகம்


பண்டிகை காலத்தையொட்டி தங்கள் இணையதளத்தில் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்களின் தயாரிப்புகளை அவர்கள் அதிக அளவில் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அமேசான் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அமேசான்.இன் இணையதளத்தில் வரும் நவம்பர் 4ந்தேதி வரை இணையும் புதிய விற்பனையாளர்களுக்கு பரிந்துரை கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் இந்நிறுவனம் வழங்குகிறது. 

இந்த சலுகை அவர்கள் இணைந்த நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். சமீபத்தில், இந்நிறுவனம் மல்டி-சேனல் புல்பில்மெண்ட் திட்டத்தை அறிவித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை எளிதாக டெலிவரி செய்ய உறுதுணையாக இருப்பதோடு, விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் 100 சதவீத சேவை செய்யக்கூடிய பின்-கோடுகளையும் வழங்குகிறது.

 அமேசான்.இன் புதிய ‘‘கிரேட் இந்தியன் ரெபரல் ஆபர்’’ என்னும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இதில் ஏற்கனவே உள்ள விற்பனையாளர்கள் தங்கள் நண்பர்களை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்வதன் மூலம் 11,500 ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெறலாம். இந்த வெகுமதி திட்டம் வரும் 27-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சேல் ஈவன்ட் பிளானர்’ என்னும் திட்டமானது விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்க உதவுவதோடு, அவர்களின் சரக்குகளை முன்கூட்டியே திட்டமிடுதல் மற்றும் அவர்களின் விற்பனையை வளர்க்கும் திறன் கொண்டதாக இருப்பதோடு, அமேசான் சந்தையில் முதல் முறையாக நுழையும் விற்பனையாளர்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

‘அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’  அக்டோபர் 8 முதல் துவங்கி இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை வளர்க்க இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.  அமேசான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருவதோடு, சிறப்பான உள்கட்டமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிராந்திய மொழி அனுபவத்தை வழங்குகிறது. தமிழகத்தில் இருந்து மட்டும் தற்போது 90 ஆயிரம் விற்பனையாளர்கள் அமேசான்.இன் இணையதளத்தில் உள்ளனர். 

  இந்நிறுவனம் 110க்கும் மேற்பட்ட பார்ட்னர் டெலிவரி நிலையங்களைக் கொண்டு உள்ளதோடு, மாநிலம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ கடைகளையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அமேசானின் பயணம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 50 ஊழியர்களுடன் தொடங்கியது, இன்று அது சென்னை, சேலம் மற்றும் கோவையில் உள்ள அலுவலகங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அமேசான் இந்தியாவின் நிறைவேற்று மையம் மற்றும் உலகளாவிய வர்த்தக துணைத் தலைவர் விவேக் சோமரெட்டி கூறுகையில், தமிழகம் எங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக சந்தையாக உள்ளது. எங்கள் விற்பனையாளர்கள் தங்களின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்து அவர்கள் வெற்றி பெற நாங்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறோம்.  எங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மூலம், விற்பனையாளர்கள் தங்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும் வேகமாகவும் கொண்டு செல்கிறார்கள். டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form