ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டாக்டர் பி.ராஜேஷ் குமார்

பருவமழைக் காலம் நெருங்கி வரும் நிலையில், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாஸக் கோளாறுகளும் பெருகும்.  இடியுடன் கூடிய மழைக்குப் பின்னர் ‘இடியுடன் கூடிய ஆஸ்துமா’ என்ற சொல்லுக்கு வழிவகுக்கும் வகையில், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி உட்பட ஆஸ்துமா வகைகள் கணிசமாக அதிகரிக்குமென ஆய்வுகளார்கள் தெரிவிக்கின்றனர்.மருத்துவர் பரிந்துரையின்படி சரியான சிகிச்சையைத் திட்டமிடலும், இன்ஹேலர் பயன்படுத்துதலும், பருவமழைக் காலத்தைச் சமாளிக்க ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் அவசியமாகும்.  

இது குறித்து மதுரை நுரையீரல் மருத்துவர் டாக்டர் பி.ராஜேஷ் குமார் கூறுகையில் ‘ஆஸ்துமா நாள்பட்ட அழற்சி நிலையாகும்.  நோய்க்குறிகளின் எச்சரிக்கை சமிஞைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அறிவை,  நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெறுவது நலம். நோய் தொடர்பான குறைந்த அளவிலான விழிப்புணர்வும், மூச்சை உள்ளிழுக்கும் சிகிச்சை குறித்த தவறான கருத்துக்களும், ஆஸ்துமாவைக் கட்டுக்கதைகளாலும், களங்கத்தாலும் மூடி மறைக்க வழிவகுத்துள்ளன. இதன் விளைவாக குறைந்த அளவிலான நோய்க் கண்டறிதல், தாமதமான அல்லது போதுமான சிகிச்சையின்மை மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகள் எண்ணிக்கை ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளன” என்றார்.

 சுற்றுப்புறங்களைச் சுத்தமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டும். நுரையீரல் சுகாதாரத்தை பீக் ஃப்ளோ மீட்டர் மூலம் கண்காணிக்க வேண்டும். இந்தக் கையடக்கக் கருவி நுரையீரல் திறனையும் சுவாஸப் பாதை திறந்த நிலைத் தன்மையையும் அளக்க உதவும். மருத்துவருடன் கலந்தாலோசித்து ஆஸ்துமா மருந்துகள், ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், தீவிர நிலைத் தன்மைகள், தூண்டல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்துப்பூர்வ வழிகாட்டியாக அமைதல் வேண்டும். 

இது நோய்க் அறிகுறிகளைச் சமாளிக்கவும், தூண்டுதல்களைக் கண்டறிந்து கண்காணிக்கவும், நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிமோனியாவாக உருவாவதைத் தடுக்கவும், மூச்சுக்குழாய் நோய்த் தொற்றின் அபாயத்தைக் குறைக்கவும், வருடாந்திரக் காய்ச்சல் தடுப்பூசிகள் மற்றும் வழக்கமான நிமோகாக்கல் நிமோனியா தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form