ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் எக்ஸ்சேஞ்ச் கார்னிவல் அறிமுகம்

 


மாடல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முனைவுகளை நிகழ்நிலைப்படுத்துவதைத் தொடரும் வகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2023 ஆகஸ்டுக்கான எக்ஸ்சேஞ்ச் கார்னிவலை அறிமுகப்படுத்தி உள்ளது.  ஸ்கோடா வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய உரிமை அனுபவத்தையும் மதிப்பையும்  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எக்ஸ்சேஞ்ச் கார்னிவல்.  

வாடிக்கையாளர்கள் மறக்க முடியாத மற்றும் உயர் மதிப்புள்ள மகிழுந்தை வாங்க மற்றும் பரிமாற்ற அனுபவம் பெறுவதை 2023 ஆகஸ்ட்டுக்கான எக்ஸ்சேஞ்ச் கார்னிவல்  உறுதிப்படுத்துகிறது. மேலும் ஸ்கோடா மகிழுந்துகளை வாங்குவதன் மூலம் சிக்கலற்ற உரிமையாளர் அனுபவத்துடன், நம்ப முடியாத பராமரிப்பு மற்றும் வாரண்டி தொகுப்புகளையும் அள்ளித் தருகிறது.

எக்ஸ்சேஞ்ச் கார்னிவல் மூலம் ஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ 60,000/- வரையிலான பலன்களையும், ரூ 70000/- வரையிலான கார்பொரேட் பலன்களையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்  விரும்பினால் தங்களிடம் உள்ள பழைய மகிழுந்தை ஓட்டி உள்ளே நுழைந்து, புதிய ஸ்கோடா மகிழுந்தை ஓட்டி வெளியே செல்லலாம். இதன் மூலம் விரைவான, சிக்கலற்ற, ஒற்றைச் சாளர ஒற்றை முறைப் பரிமாற்றம், வாங்கல், ஆவண அனுபவம் ஆகியவற்றுடன்,  தங்களது பழைய மகிழுந்தை நல்ல விலைக்கும் விற்கலாம். புத்தம் புதிய ஸ்கோடா மகிழுந்துக்கு நல்ல பலன்களையும், பராமரிப்பு மற்றும் வாரண்டி தொகுப்புகளை பெறலாம்.

எக்ஸ்சேஞ்ச் கார்னிவல் திட்டம் மூலம் பழைய மகிழுந்துகளுக்கு மிகச் சிறந்த விலையோடு, புதிய ஸ்கோடா மகிழுந்துகளுக்கு இலவச பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புத் தொகுப்புகளையும் 4 ஆண்டுகளுக்குப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 4000/- வரையிலான விரிவுபடுத்தப்பட்ட வாரண்டி பலன்கள் கிடைப்பதால், பழைய மகிழுந்துகளுக்கு நல்ல விலையும், புதிய ஸ்கோடா மகிழுந்துகளுக்கு வாரண்டி, பராமரிப்புத் தொகுப்புகள், ஈடு இணையற்ற உரிமையாளர் அனுபவம் உள்ளிட்ட அனைத்தையும் பெறலாம். எனவே இந்த எக்ஸ்சேஞ்ச் கார்னிவலைப் பயன்படுத்த இதுவே நல்ல தருணமாகும் என ஸ்கோடா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form