அப்பேரல் மேனுஃபேக்சரர்ஸ் ஆஃப் இந்தியா அத்வைத் 2.0-ஐ வெற்றிகரமாக முடித்தது


 

இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் குழுமங்களில் ஒன்றான அப்பேரல் மேனுஃபேக்சரர்ஸ் ஆஃப் இந்தியா, தனது 4 நாள் மெகா சவுத் கான்க்ளேவ் - அத்வைத் 2.0 சென்னை வர்த்தக மையத்தில் நடத்தியது.

தென்னிந்தியாவில் ஏஎம்ஐ இன் 40வது கண்காட்சியில் 2000க்கும் மேற்பட்ட முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். நல்லிஸ் சில்க்ஸ், ஷோபா, போத்தீஸ், ஆர்எஸ் பிரதர்ஸ் ரீடெய்ல் இந்தியா பிரைவேட் லிமிடெட், மாரி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட், கலாமந்திர், கிசான், மைசூர் எம்போரியம், வோல்கா டிரஸ்ஸஸ் குல்பர்கா, அசோகா வல்லியூர், பச்சையப்பாஸ், கே வி டெக்ஸ், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், லக்கி ரீடெய்ல் மற்றும் ஜி வி மால் உள்ளிட்ட முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

அத்வைத் 2.0 இன் மாபெரும் வெற்றியை பற்றி, அப்பேரல் மேனுஃபேக்சரர்ஸ் ஆஃப் இந்தியாவை சேர்ந்த நிகில் ஃப்யூரியா மற்றும் தர்மேஷ் நந்து ஆகியோர் பேசுகையில், “நான்கு மாநிலங்களில் கிடைத்த வரவேற்பால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மேலும் இங்கு அனைவரின் வருகைக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சென்னையில் எங்களின் அனைத்து கண்காட்சிகளிலும் நாங்கள் எப்போதும் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளோம், இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை” என்றனர்.

“உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் சப்ளையர்களின் முழுத் தொழிற்துறைக்கும் நீட்டிக்கப்பட்ட ஆதரவை கொண்டு, ஒரு சமூகமாக ஒன்றிணைந்து வளர, ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு நாங்கள் கிட்டத்தட்ட 250 கோடி மதிப்பிலான விற்பனை ஆர்டர்களை பெற்றுள்ளோம், கடந்த 2-3 ஆண்டுகளில் ஏற்பட்ட மந்தநிலைக்கு பிறகு, மீண்டும் வளர்ச்சியை நோக்கி செயல்படுவதால், ஒட்டுமொத்த துறைக்கும் இது ஒரு சாதகமான அறிகுறியாகும்”, என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் ஃபேஷன் பிராண்டுகள், ரெட் & ஒயிட், 90 எம்.எல்., ஆர்-விங்ஸ், டைனி பேபி, பெட்டி, ப்ரீட்டி வுமன், ஃபெமி டிசைன், எரா-திங், ஃபைனல் சாய்ஸ், பாரி/பரிட்டா, மைரா, என்-டிக் மற்றும் விமல் ஃபேஷன் ஆகியவை அவற்றின் வரவிருக்கும் பண்டிகை கலெக்ஷனை காட்சிப்படுத்திய சில முக்கிய பிராண்டுகள் ஆகும்.

பரிணாமம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளுக்காக ஒரு வலுவான சமூகத்தை உருவாக்க உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைப்பதை ஏஎம்ஐ நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஆயத்த ஆடை சந்தையின் முழு மதிப்பு சங்கிலிக்கும் அர்த்தத்தை சேர்க்க அவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form