லெக்ஸஸ் இந்தியா தனது மிகவும் பிரபலமான Lexus Design Award India 2024 (LDAI), ஏழாவது பதிப்பின் நுழைவுக்கான அழைப்பை அறிவித்துள்ளது. இது வடிவமைப்பு வல்லுநர்கள் தங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான தளமாகும். பதிவுகள்செப்டம்பர் 30, 2023 வரை ஏற்றுக் கொள்ளப்படும். வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அனைவருக்கும் செழிப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிக்க வடிவமைப்பு நிபுணர்களிடமிருந்து புதுமையான யோசனைகளை Lexus India எதிர் நோக்குகிறது.
LDAI, 2018 இல் அதன் முதல் பதிப்பில் இருந்து, அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் தனித்துவமான வடிவமைப்புகளைப் பகிர்ந்து கொண்டு சிறந்த நாளையை உருவாக்கும் நோக்கத்துடன்6 ஆண்டுகளில், LDAI நாடு முழுவதிலும் இருந்து 4300 க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பெற்றுள்ளது. சுகாதாரம், ஆற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்கள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடைசிப் பதிப்பான Lexus Design Awards 2023 கடந்த ஆண்டு டிசம்பர் 2022 இல் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கண்டது.
Lexus Design Award India 2024 குறித்து பேசிய லெக்சஸ் இந்தியாவின் தலைவர் நவீன் சோனி, “Lexus Design Award India 2024ஐ அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒரு தனித்துவமான தளமாகும். இது நம் நாட்டில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளை தீர்க்கும் வடிவமைப்பின் திறனை எடுத்துக்காட்டுகிறது. லெக்ஸஸ் இந்தியாவில், புதுமைகளை வளர்ப்பதிலும், வரம்புகளைத் தாண்டி முயற்சி செய்தலிலும், வளர்ந்து வரும் திறமையாளர்களை வளர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மதிப்புமிக்க விருது, அவர்களின் தொலைநோக்கு யோசனைகள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வடிவமைப்பு சமூகத்தில் அவர்களின் புத்திசாலித்தனத்தை கெளரவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளிமயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கி நாம் பாதையை அமைக்கும் போது, நமது தேசம் எதிர் கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் வடிவமைப்பு ஏற்படுத்தக் கூடிய ஆழமான தாக்கத்தைக் காண நாங்கள் ஆவலுடன் உள்ளோம்” என்றார்.