‘கனரா ரோபெகோ மல்டி கேப் ஃபண்ட்’

இந்தியாவின் இரண்டாவது மிகப்பழமையான மியூச்சுவல் ஃபண்டான ‘கனரா ரோபெகோ மியூச்சுவல் ஃபண்ட்’, ‘கனரா ரோபெகோ மல்டி கேப் ஃபண்ட்’ என்கிற தீர்வினை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்ட் சேவையானது பல்வேறு மாறுபட்ட சந்தை மூலதனங்களைக்  கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும். 

அதேநேரத்தில், போர்ட்ஃபோலியோவினை சீராக நிர்வகித்து நல்ல செயல்திறனை உருவாக்க உதவுகிறது மற்றும் பண்முத்தன்மையை கடைபிடிப்பதன் மூலம் போர்ட்ஃபோலியோவின் மீதுள்ள ஒட்டுமொத்த அபாயத்தை குறைக்க உதவுகிறது.

லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப்பிடல் பங்குகளில் முறையே ஒவ்வொன்றிலும் 25 சதவிகிதம் ஈக்விட்டி எக்ஸ்போஷர் வரம்பைக் கொண்டிருக்கும், இந்த மல்டி-கேப் ஃபண்ட் -  இந்த கேப்களில் ஏதேனும் ஒன்றில் அதிக அளவில் முதலீடுகளை உயர்த்தும் நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு மாறக்கூடிய உத்தியைப் பின்பற்றும். ஆல்பா ஜெனரேஷனுடன் போர்ட்ஃபோலியோ நிலைத்தன்மையையும் இணைப்பதே இந்த ஃபண்ட் மேனேஜரின் முதலீட்டு யுக்தியாகும்.இந்த ஃபண்ட் முதலீட்டாளர்களை, ஒரு நிறுவனத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் பங்கேற்க அனுமதிக்கும் ஒரு நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும்.

‘நிஃப்டி 500 மல்டிகேப் 50:25:25 இன்டெக்ஸ் டிஆர்ஐ’என்பது கனரா ரோபெகோ மல்டி கேப் ஃபண்டின் நிர்ணயிக்கப்பட்ட முதல்-நிலை அளவாகும். ஃபண்டில் உள்ள லார்ஜ் கேப் பங்குகள் முதல் 100 நிறுவனங்களில் இருக்கும், மிட் கேப் பங்குகள் 101-வது நிறுவனத்திலிருந்து 250-வது நிறுவனம் வரை இருக்கும், மற்றும் ஃபண்டில் உள்ள ஸ்மால் கேப் பங்குகள் முழு சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 251-வது நிறுவனத்திலிருந்து துவங்கும். 

லார்ஜ் கேப் பங்குகள் பல தசாப்தங்களாக தங்கள் திறமையை நிரூபித்தவையாக இருக்கும். நன்கு நிறுவப்பட்ட தொழில் மாதிரிகள், கட்டமைப்பு வரலாறு மற்றும் வளர்ச்சிக்கான சீரான வழியைக் கொண்ட நிறுவனங்கள் மிட் கேப் பங்குகளின் ஒரு பகுதியாக இருக்கும்; மேலும் சிறய கேபிடல் பங்குகள் நாளைய தொழில்துறை முன்னோடிகளாகும் வாய்ப்புள்ள நிறுவனங்களாக இருக்கும், அவை விரைவான வளர்ச்சியைக் காண்பதற்கான நல்ல திறனைக் கொண்டுள்ளவையாக இருக்கும்.

“ ரிஸ்க் மற்றும் ரிவார்டு ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையை எதிர்பார்க்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், மற்றும் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பல்வேறு மார்கெட் சுழற்சிகளிலும் முதலீட்டை தக்க வைத்து காத்திருக்க தயாராக இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் - இந்த தனித்துவமான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கும் பல்வேறு மார்க்கெட் கேபிடல்களை கொண்ட நிறுவனங்களினால் இது சாத்தியமாகும் மற்றும் இந்தியாவின் வர்த்தக வளர்ச்சியின் மூலம் பயன் பெறலாம்”, என்று கனரா ரோபெகோ மியூச்சுவல் ஃபண்டின், தலைமை செயல் அலுவலர் ரஜ்னீஷ் நருலா தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form