அமேசான் எக்ஸ்போர்ட்ஸ் டைஜஸ்ட் 2023 வெளியீடு

அமேசான் எக்ஸ்போர்ட்ஸ் டைஜஸ்ட் 2023 என்பதை வெளியிட்டுள்ளது மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்களின் ஈ-காமர்ஸ் ஏற்றுமதி திட்டமான, அமேசான் குளோபல் விற்பனை 2023 இல் 8 பில்லியன் டாலர்களை கடக்கும் நிலையில் உள்ளது என்பதை அறிவித்துள்ளது.  2015 இல் அதன் தொடக்கம் முதல் 1.25 லட்சத்திற்கும் அதிகமான (125ஆயிரம்) ஏற்றுமதியாளர்களாக அதிகரித்துள்ளது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள அமேசானின் 18க்கும் மேலான சர்வதேச சந்தைகள் மூலம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த ஏற்றுமதியாளர்கள் மில்லியன் கணக்கான 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளை முன்னிலைப்படுத்துகின்றனர்.

அமேசானின் வருடாந்திர எக்ஸ்போர்ட்ஸ் டைஜஸ்டின் 2023 பதிப்பு, அமேசான் குளோபல் விற்பனைத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியின் வெற்றி மற்றும் அளவு குறித்தான அறிவார்ந்தவைகளை வழங்குகிறது. அமேசான் குளோபல் விற்பனையானது, இந்தியா முழுவதும் உள்ள எம்எஸ்எம்இகள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதியை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. 

 தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, கரூர் மற்றும் திருவள்ளூரில் இருந்து 5000க்கும் அதிகமான எற்றுமதியாளர்கள் ஆடை, வாகனம், வீட்டு பொருட்கள், சமையலறை பொருட்கள், சுகாதார பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புகளை பல வெளிநாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளனர்,  என அமேசான் இந்தியா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form