புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக பயோ எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவித்தல், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் இருப்பை மேம்படுத்துதல் மற்றும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை நிரப்புதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புற மேம்பாட்டிற்காக பாடுபடும் அரசு சாரா நிறுவனமான ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூசிவ் டெவலப்மென்ட் அன்ட் சர்வீசஸ் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட உள்ளூர் நிகழ்ச்சியில், ரெடிங்டன் ஃபவுண்டேஷன் அந்தந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு பயோகேஸ் ஆலைகள் மற்றும் குளத்தை ஒப்படைத்தது. ஆர்.ஐஸ்வர்யா ராமநாதன், ஐஏஎஸ் - ஆர்டிஓ, விஜயராகவன், சிஎஃப்ஒ - ப்ரோகனெக்ட், ராகேஷ், ஹெச்.ஆர்- ப்ரோகனெக்ட், டாக்டர் பூர்ணிமா ராவ், டிரஸ்டி - ரெடிங்டன் ஃபவுண்டேஷன், ரெடிங்டன் & ப்ரோ கனெக்ட் மற்றும் எச்எச்ஐடிஎஸ் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர் என ரெடிங்டன் ஃபவுண்டேஷன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.