முதுகலை மருத்துவம் படிக்க விரும்புபவர்களுக்கு ஆலன் சூப்பர் ஆப் அறிமுகம்

மருத்துவப் பயிற்சி மையங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ஆலன், நீட் பி.ஜி, ஐ.என்.ஐ.-சி.இ.டி மற்றும் எப்.எம்.ஜி.இ. தேர்வுத் தயாரிப்புக்கான விரிவான வழிகாட்டுதலை முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஆலன் நெக்ஸ்ட் என்கிற அதிநவீன மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. தற்போது சந்தையில் உள்ள பிற தேர்வுத் தயாரிப்பு தளங்களில் இருந்து வேறுபட்டு, தனித்துவமான அம்சங்கள், பாடங்களுக்கான ஆதாரங்களை இந்த ஆப் வழங்குகிறது. 

ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா என்கிற மூன்று விரிவான பாடத் தொகுப்புகள் மாணவர்களின் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில், அவர்களின் தயாரிப்புகளுக்கான சிறந்த பாட ஆதாரங்களை எளிதாக அணுகுவதையும் உறுதிப்படுத்துகிறது. பிரத்யேக முன்னணி ஆசிரியர்களிடமிருந்து சமீபத்திய மாற்றங்களுடன் கூடிய, சுருக்கமான  பாடங்களை வழங்குகிறது.

ஆல்பா பாடத்திட்டத்தில் நேரடி வகுப்பறை கற்றல், திருப்புதல் ஆகியவை சேர்ந்து வழங்கப்படுகின்றன. இதில் 700 மணிநேரத்திற்கு அதிகமான வீடியோக்கள், நல்ல ரேங்க் பெறுவதற்கு கூடுதல் எட்ஜ் வீடியோக்கள், நெக்ஸ்ட் நிலை-2க்கான மருத்துவ திறன் வீடியோக்கள், 200 மணிநேரத்திற்கும் அதிகமான விரைவான திருப்புதல் வீடியோக்கள், 10,000க்கும் அதிகமான முந்தைய ஆண்டு கேள்வித்தாள் கேள்விகள், ரேஸ் மற்றும் மருத்துவ கேள்விகள் ஆகியவை அடங்கும். 

200க்கும் அதிகமான பாட வாரியாக சிறிய மற்றும் பெரிய தேர்வுகள், டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட குறிப்புகள் வழங்கப்படும்.பீட்டா பாடத்திட்டத்தில் இணையவழி கற்றல், திருப்புதல் ஆகியவை சேர்ந்து வழங்கப்படுகின்றன. ஆல்பா பாடத்திட்டத்தின் அனைத்து அம்சங்களும் இதில் அடங்கும். டெல்டா பாடத்திட்டத்தில் 10,000க்கும் அதிகமான கேள்விகள் மற்றும் 200க்கும் அதிகமான பாட வாரியான தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுப் பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறது.

தினசரி விநாடி வினாக்கள், கருத்து அடிப்படையிலான வீடியோக்கள், சமீபத்திய செய்திகள், தேர்வுத் தகவல்கள், நீட் பி.ஜி., ஐ.என்.ஐ.-சி.இ.டி., எப்.எம்.ஜி.இ., நெக்ஸ்ட் ஆகியவற்றில் கேட்கப்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய வீடியோ வங்கி மூலம் மாணவர்கள் தங்கள் அறிவை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலம்  மற்றும் ஹிங்கிலிஷ்  மொழிகளில் 700 மணிநேரத்திற்கும் வீடியோ உள்ளடக்கத்துடன், இந்த செயலியில் அனுபவம் வாய்ந்த - பிரத்யேக முன்னணி ஆசிரயர்கள் கற்பிக்கிறார்கள்.முதன்மை வீடியோ உள்ளடக்கத்துடன் கூடுதலாக செயலி சார்ந்த அதிநவீன வீடியோக்கள், மருத்துவ வீடியோக்கள் மற்றும் நடைமுறை வீடியோக்களும் வழங்கப்படுகின்றன. இது மருத்துவ தலைப்புகள் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது.

ஆலன் நெக்ஸ்ட் இணையவழி ஆதாரங்களை வழங்குவதைத் தாண்டியது. இந்தியா முழுவதிலும் உள்ள ஆலன் மையங்களில் கணினி அடிப்படையிலான நேரடியான பாடம் வாரியான பெரிய, சிறிய தொடர் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். ஆலன் நெக்ஸ்ட் ஆப், பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் எளிதாக செயலியை அணுக முடியும். கூடுதலாக, ஆலன் நெக்ஸ்ட் நேரடி மையங்கள் விரைவில் நாடு முழுவதும் தொடங்கப்படும். இது மாணவர்களுக்கு வகுப்பறை கற்றலுக்கான வாய்ப்பை வழங்கும்.கூடுதல் விவரங்களுக்கு, www.allennext.com <http://www.allennext.com> என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து ஆலன் நெக்ஸ்ட் வெர்டிகல் , ஹோல் டைம் அமன் மகேஸ்வரி கூறுகையில், "மாணவர்களின் பரபரப்பான வேலை அட்டவணையை தொந்தரவு செய்யாமல், மருத்துவ முதுகலை நுழைவுத் தேர்வுத் தயாரிப்பு நடைமுறையை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும் மாற்றுவதே ஆலன் நெக்ஸ்ட் மொபைல் ஆப்பின் குறிக்கோள். நீட் பி.ஜி., ஐ.என்.ஐ.-சி.இ.டி. மற்றும் எப்.எம்.ஜி.இ. தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவதற்கான செயல் திட்டத்தை அளிப்பதன் மூலம், முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைய உதவுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form