ஆகாஷ் பைஜூஸின் புதிய கிளை திருப்பூரில் துவக்கம்


மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஆகாஷ் பைஜூஸ், அதன் நீட், ஐஐடி ஜேஇஇ, ஒலிம்பியாட்ஸ் பயிற்சி மற்றும் அடிப்படை படிப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவைக்கு உதவும் வகையில், தமிழ்நாட்டின் திருப்பூரில் தனது முதல் வகுப்பறை மையத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு அவர்கள்  வசிக்கும் இடத்தில் இருந்தே தரமான நேரடி பயிற்சி சேவைகளை வழங்கும்  நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 

திருப்பூரில் புதிய மையத்தை நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குநர் தீரஜ் குமார் மிஸ்ரா திறந்து வைத்தார். ஆகாஷ் பைஜூஸ், வார்டு ஜி, 1வது & 2வது தளம், பிளாக் 11, தாராபுரம் மெயின் ரோடு, கரட்டாங்காடு, திருப்பூர் எனும் முகவரியில் ஒரு பிரதான இடத்தில் 6500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம் 9 வகுப்பறைகளைக் கொண்டுள்ளது.

1040க்கும் அதிகமான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை வழங்கும். இணைக்கப்பட்ட மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்ட இந்த மையம், அதன் ஹைப்ரிட் படிப்புகளைக் கற்கும் மாணவர்களுக்கு தடையற்ற கற்றல் அனுபவத்தையும் வழங்கவுள்ளது.மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலைப் பகிர்வதன் மூலம் உடனடி சேர்க்கை மற்றும் உதவித்தொகை தேர்வு (ஐஏசிஎஸ்டி), எசிஎஸ்டி ஆகியவற்றில் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஆகாஷ் பைஜூஸின் நேஷனல் டேலண்ட் ஹண்ட் தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

திருப்பூரில் புதிய மையத்தை தொடங்குவது குறித்து ஆகாஷ் பைஜூஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி கூறுகையில், “ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்தில், மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வியை ஊக்குவிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  எங்கள் மாணவர்களின் கற்றல் அனுபவத்தையும் விளைவுகளையும் அதிகரிக்கவும், அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க நேரடி மற்றும் மெய்நிகர் ஆகிய இரு கற்றல் நிலைகளிலும் சிறந்ததை வழங்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆகாஷ் பைஜூஸின் மண்டல இயக்குநர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், “எங்கள் பயிற்சி சேவைகளை உண்மையிலேயே மதிக்கும் மற்றும் விரும்பும் நூற்றுக்கணக்கான நீட், ஜேஇஇ மற்றும் ஒலிம்பியாட் ஆர்வலர்களின் இருப்பிடமான திருப்பூரில் எங்கள் முதல் மையத்தைத் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆலோசகர்கள் உள்ளனர். ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு மையம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், பாடத்திட்டத்தின் தரம் எப்போதும் பராமரிக்கப்படுவதை இவர்கள் உறுதி செய்வார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் சொந்த இடத்தில் மையத்தை தொடங்குவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த பயிற்சி இப்போது அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form