இந்தியாவில் பாதுகாப்பான குடும்ப காராக ஸ்லேவியா தரம் உயர்வு



ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் க்ராஷ் தர மதிப்பீடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்கோடா ஸ்லேவியா செடான் குளோபல் புது கார் பகுப்பாய்வு திட்டத்தின் கீழ் (குளோபல் என்சிஏபி) சமீபத்தில் நடைபெற்ற க்ராஷ் பரிசோதனைகளில் 5க்கு 5 நட்சத்திர மதிப்பெண்களை முழுமையாகப் பெற்றது. மேலும் இது வரை நடைபெற்ற குளோபல் என்சிஏபி பரிசோதனைகளில் ஸ்லேவியா செடானுக்கே அதிகப் பாதுகாப்பான காராகச் சான்றளித்துள்ளது.

 இதன் காரணமாக ஸ்கோடா ஆட்டோ இந்தியாவை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பான பயணத்துக்கான க்ராஷ் பரிசோதனைகளில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே தயாரிப்பாளர் என்ற பெருமையையும் வழங்கி உள்ளது.   பெரியவர்களின் பயண வசதிகளில் 34இல் 29.71 மதிப்பெண்களையும் பெற்று குழந்தைகளின் பயண வசதிகளில் 49இல் 42 மதிப்பெண்களுடன் 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது.

 பல்வகையான உட்புறத் தாக்கங்களுக்காகவும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை மனத்தில் கொண்டே ஸ்லேவியா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூடு கட்டமைப்பு லேசர் வெல்டிங்கினால் ஆனது. அதிக வலிமை கொண்ட எஃகு கட்டமைப்பு காரணமாக விபத்தின் போது, தாக்கத்தைக் காரின் வெளிப்புறக் கூடு தாங்கிக் கொள்வதால், உட்புற கேபினில் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஸ்லேவியா உறுதியான மற்றும் தாக்கங்களைத் தாங்கி ஈர்த்துக் கொள்ளும் வகையில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டதால், உள்ளும் புறமுமாக முழுமையான பாதுகாப்பைக் கொண்ட கார் இதுவே ஆகும். 

6 ஏர்பேக், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, மல்டி கொலிஷன் பிரேக்கிங்க், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி-லாக் பிரேக், குழந்தைகள் இருக்கைகளுக்கான ஐஸோ ஃபிக்ஸ் மவுண்ட்ஸ், டாப் டீத்தர் ஆங்கர் பாயிண்ட்ஸ், ரெயின் சென்சிங்க் வைப்பர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ், டயர் அழுத்த கண்காணிப்புக் கருவி உள்ளிட்ட பல அம்சங்கள் ஸ்லேவியாவில் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்லேவியா அமைத்துள்ள பாதுகாப்புத் தரக் கட்டுப்பாடுகள் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஸோல்க் கூறுகையில் ‘ எங்களது இரண்டாவது இந்தியா 2.0 கார் - ஸ்லேவியாவுக்கு குளோபல் என்சிஏபி பாதுகாப்புப் பரிசோதனையில் 5 நட்சத்திர மதிப்பெண் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   பாதுகாப்பில் விரிவான அணுகுமுறையுடன், எங்களிடம் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட 5 நட்சத்திர மதிப்பெண் பெற்ற பாதுகாப்பான் கார்கள் உள்ளன. கார்களின் தரம், நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பில் நாங்கள் எப்போது கவனம் செலுத்துகிறோம் என்பதற்கு இதுவே சான்றாகும். எங்களது உபாயங்களில் பாதுகாப்பு முக்கிய அங்கம் வகிப்பதால் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து கார்களைத் தயாரிப்போம்’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form