மோஜ் கிரியேட்டர்கள் தமிழ் படத்தில் நடிக்க தேர்வு


இந்தியவின் மிகப் பெரிய குறுங்காணொலி செயலியான மோஜ் முதன் முறையாக ஏற்பாடு செய்த ஆடிஷன்களில் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகும் ‘ஹைனா’ தமிழ்ப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. 

 ஆகஸ்ட் 29 தொடங்கி 40 நாள்கள் நடைபெற்ற ‘#ஹைனாஆடிஷன்ஸ்ஆன்மோஜ்’ ஆடிஷன் பிரச்சாரத்தில், 15000 மோஜ் கிரியேட்டர்களிடமிருந்து 175கே காணொலிகள் மற்றும் 1.9 பில்லியன் காணொலி பிளேக்கள் வந்தன. சென்னையைச் சேர்ந்த 24 வயது மோஜ் கிரிரேட்டரான ரியா நேஹால் நடிகையாகவும், பெங்களூரைச் சேர்ந்த 23 வயது கண்டெண்ட் கிரியேட்டரான ஐஸ்வர்யா கண்ணன் துணை நடிகையாகவும் தேர்வானார்கள். 175கே நுழைவுகளிலிருந்து இவ்விருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதுமை, புதுமுகம் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற பிரபல தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்டின் சி வி குமார் ‘ஹைனா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். அட்டக்கத்தி, பீட்சா மற்றும் சூது கவ்வும் உள்ளிட்ட வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்துப் பாராட்டுகளைக் குவித்துள்ளார். புதுமுகம் பிரசாந்த் சந்தர் இதை இயக்கி உள்ளார். 

தமிழில் மிகச் சிறப்பாக வசனம் பேசியதற்கும், நடிப்புத் திறனை வெளிப்படுத்தியமைக்கும், தேர்வாகி உள்ள ரியா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும், தற்போது கோலிவுட்டில் தடம் பதிக்க உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக குறுங்காணொலி செயலியான மோஜ் மூலம் திரைப்பட ஆடிஷன் நடைபெற்றது இதுதான். தங்களது திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களில் நடிக்கவும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மோஜ் செயலியில் பதிவேற்றப்பட்ட கிரியேட்டர்களின் காணொளிகளில் அவர்களது திரைத் தோற்றம், நடிப்புத் திறன், உணர்ச்சிகளின் வெளிப்பாடு, கேமராவுக்குத் தயாராதல் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் இறுதிக்கட்ட வெற்றியாளர்களைத் தயாரிப்பாளரும், இயக்குனரும் தேர்ந்தெடுத்தனர். இளம் இந்தியர்கள் பொழுதுபோக்குத் துறையில், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், பெயரும், புகழும் பெறவும், அவர்களுக்கான தளத்தை வழங்குவதே மோஜ்-இன் நோக்கமாகும், என்று மோஜ் கண்டெண்ட் மூலோபாயம் அண்ட் செயலாக்க மூத்த இயக்குனர் ஷஷாங்க் சேகர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form