இந்தியாவில், வங்கி அல்லாத நிதி நிறுவன துறையில் ஒரு முக்கிய நிறுவனமான எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் கம்பெனி லிமிடெட், நவி மும்பையில் வாஷியில் அமைந்திருக்கும் தனது 1000-மாவது கிளையை திறப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த முக்கிய நிகழ்வு, நாடெங்கும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் மற்றும் குறைவாக ஊடுருவப் பட்ட சந்தைகளுக்குள்ளும் நிதி சேவைகளை கொண்டு செல்வதற்குமான அந்த நிறுவனத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த முக்கிய மைல்கல்லை குறிக்கும் வகையில், எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட், ஒரு சிறப்பு கவர் மற்றும் மை ஸ்டாம்ப் வெளியிட இந்திய அஞ்சல் துறையுடன் கூட்டாக இணைந்திருக்கிறது. இதன் அதிகார பூர்வமான வெளியீட்டு விழா, எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷாந்தனு மித்ராவுடன் இணைந்து மும்பையில் உள்ள ஜப்பானிய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர், யாகி கோஜி, இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிர தலைமையக வட்டத்தின் நிறுவனர் அபிஜித் பன்சோடே, போன்றோரின் வருகையால் சிறப்பிக்கப்பட்டது.
பெரிய மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த இந்திய சந்தையில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட்டின் தொலைநோக்கு பார்வைக்கு அதன் 1000-மாவது கிளை தொடக்கம் ஒரு சான்றாகும்.
நிறுவனம் இப்போது 670 நகரங்கள் மற்றும் 70,000 கிராமங்களில் 23,000-த்திற்கும் மேலான ஊழியர்களின் ஆதரவோடு இயங்கி வரும் இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு நிறுவனமாக பரிணமித்துள்ளது. இந்த மைல்கல் நிறுவனத்தின் வெற்றிக்கான வளர்ச்சி உத்தியை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், இந்திய நிதிச் சேவைத் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பாளர் எனவும் உறுதிப்படுத்துகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷாந்தனு மித்ரா பதவி காலத்தில் நிறுவனம் ஏறக்குறைய 300 புதிய கிளைகளை அதிகரித்திருக்கிறது. இவற்றில் குறிப்பிடும் வகையில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை 2 அடுக்கு+ நகரங்கள் மற்றும் நகரத்திற்கும் கிராமத்துக்கும் இடையிலான கிராமப்புறங்களில் நிறுவப் பட்டிருக்கின்றன. இந்த விரிவாக்கம், இந்தியாவெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் முறையான கடன் அணுகலை விரிவுபடுத்துவது, அவர்கள் நிதி சுதந்திரத்தை அடைய அதிகாரமளிப்பது போன்ற நிறுவனத்தின் நோக்கத்துடன் இணைந்து போகிறது.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷாந்தனு மித்ரா, “எங்கள் 1000-மாவது கிளையின் துவக்க விழா இந்தியா முழுதும் உள்ள மக்களுக்கு முறையான கடன் அணுகலை வழங்கவும் மற்றும் அவர்கள் நிதி சுதந்திரத்தை அடைய உதவவும் எங்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைவெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இந்த சாதனையை நாங்கள் கொண்டாடும் போது, எங்கள் நிறுவனம் இது வரை அடைந்துள்ள வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் மற்றும் இந்திய நிதித் துறைக்கு எங்கள் பங்களிப்புகளையும் குறிக்கும் வகையில் என் முத்திரையுடன் ஒரு சிறப்பு கவரை அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்றார்.