பியோனீர் மொபிலிட்டி-யின் புதிய ஸ்மார்ட் டாஷ்கேம் போர்ட்ஃபோலியோ அறிமுகம்



ஜப்பானின் பியோனீர் கார்ப்பரேஷனின் கிளையான பியோனீர் இந்தியா, இந்தியாவுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவெண்ட்-கார்ட் ரேஞ்ச் டேஷ்கேமராவை தனது மொபிலிட்டி ஏ.ஐ போர்ட்ஃபோலியோவில் இருந்து அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட டேஷ்கேமராக்கள் இந்திய சாலைகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருப்பதால், அனைத்து இந்திய கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் மனதிற்கும் அமைதியை கொண்டு வரும்.  

விரெக்-ஹெச்120எஸ்சி, விரெக்-ஹெச்320எஸ்சி, விரெக்-ஹெச்520டிசி மற்றும் விரெக்-இசட்820டிசி ஆகிய நான்கு மாடல்களை கொண்ட இந்த புதிய விரெக் டேஷ்கேமரா தொடர், புதுதில்லியின் ஹோட்டல் லலித்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது. பியோனீர்-இன் விரெக்-ஹெச்120எஸ்சி, விரெக்-ஹெச்320எஸ்சி, விரெக்-ஹெச்520டிசி மற்றும் விரெக்-இசட்820டிசி ஆகியவற்றின் விலைகள் முறையே ₹ 5,399, ₹ 11,399, ₹ 18,499 and ₹ 23,499. பியோனீரின் பயனர்-நட்புகரமான மொபைல் செயலி வழியாக, டேஷ்கேமராக்களை பயனர்கள் அணுக முடியும். மேலும் இந்த செயலியின் மூலம் பயனர்கள் டாஷ்கேமரா அமைப்புகளையும் மாற்றிக் கொள்ள முடியும்.

விரெக்- இசட்820டிசி என்பது 4கே வீடியோ தெளிவுத்திறன், ஏ.ஐ அடிப்படையிலான இரவு பார்வை, அகண்ட திரை மற்றும் ஏடிஏஎஸ் அம்சங்கள் உடனான ஒரு பிரீமியம் ரெட்டை-சேனல் வகையாகும். இது பின்புற கேமரா மற்றும் ஜிபிஎஸ் லாகர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது மேலும் இதனால் லூப்பில் வீடியோக்களை தொடர்ச்சியாக பதிவு செய்ய முடியும். 

விரெக்- ஹெச்520டிசி என்பது 7.6 செமீ ஐபிஎஸ் டிஸ்ப்ளே, சோனி ஸ்டார்விஸ்-2 இமேஜ் சென்சார் மற்றும் 2கே பதிவு திறன்களைக் கொண்ட ஒரு உயர்நிலை மாடலாகும். இதனால் இரவு ஒளியின் கீழ் தெளிவான வீடியோக்களை பதிவு செய்ய முடியும், மேலும் சாலை கண்காணிப்பிற்காக 350 டிகிரி சுழல முடியும். 

விரெக்-ஹெச்320எஸ்சி என்பது 7.6 செமீ ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் முழு  எச்டி ரெக்கார்டிங் திறன் கொண்ட ஒரு இடைப்பட்ட மாடலாகும், அதே சமயம் விரெக்-ஹெச்120எஸ்சி ஆனது 1296 பிக்சலில் கிரிஸ்டல்-தெளிவான பதிவுடன் மிகவும் கச்சிதமானது மற்றும் மலிவான விலையில் கிடைக்கிறது. இது 128 ஜிபி வெளிப்புற சேமிப்பகத்தை ஆதரிக்கிறது.

ஜப்பானின் பியோனீர் கார்ப்பரேஷனின் புதிதாக உருவாக்கப்பட்ட மொபிலிட்டி ஏ.ஐ அண்ட் கனெக்டிவிட்டி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சிவ சுப்ரமணியன் கூறுகையில், "கடந்த ஆண்டு இந்தியாவில் நாங்கள் நிறுவிய எங்கள் மேம்பட்ட ஆர் அண்ட் டி மையத்தில் இருந்து வரும் பல கண்டுபிடிப்புகளில் இதுவே முதன்மையானது, இது தயாரிப்புகளை உருவாக்குவதை குறிப்பாக இந்திய சந்தைகளுக்கு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த டேஷ்கேமராக்களை எங்கள் பான்-இந்தியா விநியோகஸ்தர் வலையமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 3000க்கும் அதிகமான சில்லரை விற்பனை நிலையங்களை அடைய செய்து கவர உள்ளோம்” என்றார்.

பியோனீர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அனிகேத் குல்கர்னி கூறுகையில் " தரம் மற்றும் செயல்திறன் தொடர்பான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி, புதிய மொபைலிட்டி அனுபவங்களை உருவாக்குவதில் நாங்கள் விடாமுயற்சியுடன் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவில் டேஷ்போர்டு கேமரா சந்தை 2024 இல் இருந்து 2030 வரை 15 முதல் 16 சதவிதம் அதிவேக விகிதத்தில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் புதிய ஸ்மார்ட் டேஷ்கேமரா போர்ட்ஃபோலியோ இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது”என்றார்.

பியோனீர் இந்தியாவின் தயாரிப்பு மற்றும் ஆர் அண்ட் டி துறையின் துணைத் தலைவர் மணீஷ் பாசின் பேசுகையில், "பியோனீர் இந்தியா மேம்பட்ட ஆர் அண்ட் டியில் எங்களின் குறிக்கோள், தொழில்நுட்பத்தின் எல்லைகளை கடப்பதை தொடர்ச்சியாக செய்து, கார்களை பாதுகாப்பானதாகவும், மேலும் காவல் மிக்கதாகவும் மாற்ற உதவும் தயாரிப்புகளை வடிவமைப்பதாகும். புதிய மேம்பட்ட ஆர் அண்ட் டி நிறுவனத்தை வழிநடத்த கடந்த ஆண்டு நான் பியோனீரீல் சேர்ந்தபோது, இந்திய சந்தையில் சிறப்பு கவனம் செலுத்தி புதுமையான தயாரிப்புகளை விரைவாக உருவாக்கக்கூடிய ஒரு குழுவை உருவாக்குவதே எனது குறிக்கோளாக இருந்தது. இதுபோன்ற பல வெளியீடுகளில் இந்த டாஷ்கேமராக்களை முதன்மையானது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form