இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தீர்வு வழங்குநர்களில் ஒன்றான லான்சர் கண்டெய்னர் லைன்ஸ் லிமிடெட் இந்தோனேசிய நிறுவனமான பி.டி மேப் டிரான்ஸ் லாஜிஸ்டிக், சுரபயா, உடன் 10,000 இருபது அடி கொள்கலன்கள் மற்றும் நாற்பது அடி கொள்கலன்கள்களை குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது. லான்சர் கன்டெய்னர் லைன்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் காலிக் சட்டைவாலா மற்றும் பிடி மேப் டிரான்ஸ் லாஜிஸ்டிக், சுரபயா இயக்குநர் பிரஃபுல் ஜா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
லான்சர் கண்டெய்னர்ஸ் லைன்ஸ் லிமிடெட் நிர்வாகம் இந்த மூலோபாய கூட்டாண்மையை குத்தகை நடவடிக்கைகளை அதிகரிப்பதில் ஒரு படியாகக் கருதுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவுபடுத்தி பங்குதார்களின் மதிப்பை உயர்த்தும். இந்த கூட்டாண்மை நிறுவனத்தின் நிதி செயல்திறனை அதிகரித்து சந்தை நிலையை வலுப்படுத்துவதன் விளைவாக ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் 24ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 20,000 ஆக இருந்த அதன் டியுஇ திறனை 26ஆம் நிதியாண்டிற்குள் 45,000 ஆக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாதமும் 200-300 கொள்கலன்களை இணைப்பதன் மூலம் அதன் கொள்கலன்களை சீராக வளர்க்க விரும்புகிறது. நிறுவனம் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சேவை வழங்குநராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் புதிய கப்பலை வாங்குவதற்கான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் ஆரோக்கியமான வருவாயையும் வரவிருக்கும் ஆண்டுகளில் விளிம்பு வளர்ச்சியையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லான்சர் கண்டெய்னர் லைன்ஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. அப்துல் காலிக் சட்டைவாலா பேசுகையில், “எங்கள் கன்டெய்னர் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் எங்கள் சேவை வழிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் செலுத்திய கவனம் மற்றும் முயற்சிகள் கொள்கலன்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்தது. நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட கொள்கலன்கள் இப்போது 22,707 டிஇயுகளாக உள்ளது. இந்த வளர்ச்சியானது, கப்பற்படை விரிவாக்கம் மற்றும் தளவாடங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எங்களின் மூலோபாய முதலீடுகளை எடுத்துக்காட்டுகிறது. இது உலகளாவிய வர்த்தகத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எங்கள் திறனை வெளிப்படுத்துகிறது. புதிய வர்த்தக வழிகளை ஆராய்வதன் மூலமும், சரக்குகளுக்கான தேவை உள்ள பல இடங்களுக்கு கொள்கலன்களை கொண்டு செல்வதன் மூலமும் நிறுவனம் தனது வரம்பை விரிவுபடுத்துகிறது. எங்கள் மூலோபாயத் திட்டங்கள் எங்கள் கடற்படையை விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சிகள் உலகளாவிய வர்த்தகம் மற்றும் கடல்சார் தளவாடங்களில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, 26ஆம் நிதியாண்டிற்கும் நிலையான, நீண்ட கால வெற்றிக்கு நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.
25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 172.4 கோடி, ஈபிஐடிடிஎ ரூ. 15.91 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 12.1 கோடி ஆகும். 24ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 646.8 கோடி, ஈபிஐடிடிஎ ரூ. 88.1 கோடி (ஈபிஐடிடிஎ மார்ஜின் 13.9%) மற்றும் நிகர லாபம் ரூ. 58.3 கோடி (பேட் மார்ஜின் 9.2%) ஆகும்.