அகமதாபாத்தைச் சேர்ந்த ஃபைபர் கிளாஸ் வலுவூட்டப்பட்ட பாலிமர் தயாரிப்புகளை தயாரித்து வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஏரோன் கம்போசைட். அதன் எஸ்எம்இ பொது வெளியீட்டில் இருந்து ரூ. 56.10 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது., நிறுவனம் அதன் பொது வெளியீட்டை தேசிய பங்குச் சந்தையின் என்எஸ்இ எமர்ஜ் பிளாட்ஃபார்மில் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது. பொது வெளியீடு ஆகஸ்ட் 28 அன்று சந்தாவுக்குத் திறக்கப்பட்டு ஆகஸ்ட் 30 அன்று முடிவடைகிறது.
பொது வெளியீட்டின் வருமானத்தில் ரூ. 39 கோடி, குஜராத்தின் மெஹ்சானாவில் உற்பத்தி அலகு அமைப்பதற்கும், பொது நிறுவன நோக்கத்திற்கும் மற்றும் மூலதனச் செலவுத் தேவைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும். ஹெம் செக்யூரிட்டீஸ் லிமிடெட் இந்த வெளியீட்டின் முன்னணி மேலாளர் ஆகும்.
ஆரம்ப பொதுப் பங்கீடு ரூ. 56.10 கோடி ஆனது ரூ. 44.88 லட்சம் ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீட்டை உள்ளடக்கியது. இது ஒவ்வொன்றும் ரூ. 10 என்ற முகமதிப்பை கொண்டுள்ளது, நிறுவனம் பொது வெளியீட்டின் போது ஒரு பங்கு ரூ.121 முதல்125 என விலைப்பட்டியலை நிர்ணயித்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கான குறைந்தபட்ச லாட் அளவு 1,000 பங்குகள் ஆகும். இது ஒரு பங்குக்கு ரூ. 125 என்ற விலையில் 1000 பங்குகள் ரூ. 1,25,000 ஆகும்.
ஐபிஓவிற்கான சில்லறை முதலீட்டாளர் ஒதுக்கீட்டின் நிகர சலுகையில் 35 சதவிதத்துக்கும் குறைவாக இல்லாமலும், எச்என்ஐ ஒதுக்கீடு சலுகையில் 15 சதவிதத்துக்கும் குறைவாக இல்லாமலும், கியூஐபி பகுதி சலுகையின் 50சதவிதத்துக்கு மிகாமலும் வைக்கப்படுகிறது.
நிறுவனம் பல ஆண்டுகளாக சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் பல ஆண்டுகளாக வருவாய் மற்றும் லாபத்தில் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. 23-24ஆம் நிதியாண்டில் (பிப்ரவரி, 2024 வரை), நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 9.42 கோடி, ஈபிஐடிடிஎ ரூ. 14.27 கோடி மற்றும் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 179.14 கோடி ஆகும். 2022-23 நிதியாண்டின் முழு ஆண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 6.61 கோடி, ஈபிஐடிடிஎ ரூ. 9.82 கோடி மற்றும் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 179.38 கோடி ஆகும்.
பிப்ரவரி 2024 நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ. 34.78 கோடி, இருப்பு மற்றும் உபரி ரூ. 33.21 கோடி மற்றும் சொத்து அடிப்படை ரூ. 99.79 கோடி ஆகும். பிபொது வெளியீட்டிற்குப் பிறகு நிறுவனத்தில் விளம்பரதாரர் குழுமத்தின் பங்கு 73.63 சதவிதமாக இருக்கும். நிறுவனத்தின் பங்குகள் என்எஸ்இயின் எமர்ஜ் தளத்தில் பட்டியலிடப்படும்.