மோட்டோரோலாவின் புதிய ஃப்ளிப்ஃபோன் அறிமுகம்மொபைல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கு உலகளவில் பெரும் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான மோட்டோரோலா அதன் எட்ஜ் ஃப்ரான்ச்சைஸின் புத்தம் புதிய மோட்டோரோலா ரேசர் 50 அல்ட்ரா ஃபோனை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அத்தியாயத்தின் மீண்டும் ஒரு பக்கத்தை புரட்டியிருக்கிறது. எந்த ஒரு ஃபிளிப்ஃபோனிலும் இல்லாத , ஒரு மிகப்பெரிய, மோஸ்ட் இன்டெல்லிஜெண்ட் வெளிப்புற டிஸ்ப்ளே போன்ற இந்தத் துறையிலேயே மேம்பட்ட பல்வேறு முன்னணி அம்சங்களுடனான இந்த ஃபோன் வளர்ச்சி மற்றும் மிகச் சிறந்த செயல்பாடுகளில் மோட்டோரோலா நிறுவனத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

உங்கள் ஸ்மார்ட்போன் வெறும் ஒரு சாதனமாக மட்டுமல்லாமல், அதற்கும் மேலாக, ஒரு தனிப்பட்ட உதவியாளர், கிரியேட்டிவ் ஸ்டுடியோ மற்றும் செயலாற்றல் மிக்க உற்பத்தித் திறன் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாக செயல்படும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். கூகுளுடனான கூட்டாண்மையின் கீழ் மோட்டோரோலா அதன் புத்தம் புதிய மோட்டோரோலா 50 அல்ட்ரா ஸ்மார்ட் ஃபோனில் , ஏஐ இயக்கத்துடனான அனுபவம் மற்றும் வசதியான பல சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி உங்களின் இந்தக் கற்பனையுலகத்தை ஒரு நனவுலகமாக மாற்றியிருக்கிறது.


ரேசர் பயனர்கள் முதன்முறையாக, இப்போது வெளிப்புற டிஸ்ப்ளேயிலிருந்து நேரடியாக ஜெமினியை அணுகலாம். பயனர்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு காரியமானாலும் ஜெமினி அதற்கு உதவும். மற்றும் மேப்ஸ், யுடியூப், ஜிமெயில், டிரைவ் போன்ற கூகுள் ஆப்ஸ் மற்றும் சேவைகளிலிருந்து எந்த ஒரு தடையின்றி தகவல்களை அணுகுவதற்கான ஆதரவையும் வழங்க ஜெமினி எப்போதும் தயாராக இருக்கும். அத்துடன் கூடுதலாக, பயனர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமுமின்றி மிக மிக திறமைவாய்ந்த கூகிளின் ஏஐ  மாடல்களுக்கான அணுகலுடன், 3 மாதங்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்ட்ஐப் பெறுவார்கள்.

வெளிப்புறக் டிஸ்ப்ளே அனுபவத்தை மேலும் மேம்படுத்த, புதிய ரேசர் கருவிகளில் கூகுள் போட்டோஸ் அணுகும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் மொபைலைத் திறக்காமலேயே கருவியின் உள்ளகத்தில் அல்லது கிளவுட்டில் சேமித்து வைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் காண , நீக்க, விரும்ப, அல்லது பகிர அவர்களை அனுமதிப்பதன் மூலம் , அவர்களது கடந்த கால நினைவுகளை அணுகுவதையும் புகைப்படங்களை விரைவாகக் கண்டடைவதையும் எளிதாக்குகிறது.  ஃப்ளிப் செய்து திறக்கப்பட்டவுடன் தொடுவதற்கு மிருதுவான 6.9" பிஓல்இடி டிஸ்ப்ளேயை காட்சிப்படுத்துகிறது. மேலும் இது ஒரு ஃபிளிப் ஃபோனின் மிகப்பெரிய, கிட்டத்தட்ட கிரீஸ்லெஸ் இன்டர்னல் டிஸ்ப்ளே ஆகும்.

மேலும் இந்த போனில் இதுவரை இல்லாத வகையினாலஒரு மிகச் சிறந்த ரேசர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மோட்டோ ஏஐ ஆல்இயக்கப்படும் மேம்பட்ட கேமரா தொழில்நுட்பத்துடன் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிரமமின்றி காட்சிப்படுத்துகிறது. இதிலுள்ள புதிய ஃபோட்டோ பூத் அம்சம், வெவ்வேறு தோற்ற நிலைகளில் அழகான செல்ஃபிகளைப் பிடிக்கிறது. புத்தம் புதிய ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென்3 மொபைல் இயங்குதளத்தைக் கொண்டுள்ளதால் முந்தைய தலைமுறை இயங்குதளங்களைவிட இது அதி வேகமாகவும் திறம்படவும் செயல்படும். இதன் 4000 எம்ஏஎச் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரவும் பகலும் முழுமையாக செயல்படமுடியும்.

இந்த அறிமுகம் குறித்து பேசிய மோட்டோரோலா இந்தியா மேனேஜிங் டைரக்டர் டி.எம்.நரசிம்மன் கூறுகையில், இந்த அதிநவீன கருவியானது, ரேசர்50 அல்ட்ரா ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் எதிர்காலத்தை மறுவரையறைக்குள்ளாக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக அளவற்ற மன நிறைவைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்.

இந்த போன், மிட்நைட் ப்ளூ, ஸ்பிரிங் க்ரீன் மற்றும் கலர் ஆஃப் தி இயர் 2024 - பீச் ஃபஸ் ஆகிய 3 மனதைக் கொள்ளை கொள்ளும் பான்டோன் க்யூரேட்டட் வண்ணங்களில், 12GB ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஒரே வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இது, ஜூலை 20, 2024 முதல் விற்பனைக்கு வரும் மற்றும் ஜூலை 10 ஆம் தேதி முதல் அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், மோட்டோரோலா டாட் இன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் முன்பதிவுக்கு கிடைக்கும். இந்த போனின் அறிமுக விலை ரூ.99999 ஆகும், வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு முன் வருவோருக்கான விலை ரூ.94,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி தள்ளுபடிகள் உட்பட இறுதி விலையாக ரூ. 89,999க்கு இந்த போன் சந்தையில் கிடைக்கும்.

 

Post a Comment

Previous Post Next Post

Contact Form