சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத போக்குவரத்தில் கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு வழித்தடங்களில் ‘நியூகோ’ என்னும் பெயரில் மின்சார பஸ்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் பல்வேறு புதிய வழித்தடங்களில் இந்த மின்சார பஸ்களை இயக்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இவை புதிதாக பாண்டிச்சேரி - திருச்சி, சென்னை - திருச்சி மற்றும் கோயம்புத்தூர் - திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வசதியான பயணங்களை விரும்பும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக, நியூகோ இப்போது இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பல வழித்தடங்களில் சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான தேவேந்திர சாவ்லா கூறுகையில், பாண்டிச்சேரி, சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களை திருச்சியுடன் இணைக்கும் இந்த புதிய வழித்தடங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டில் மேலும் புதிய வழித்தடங்கள் எங்களின் நியூகோ மின்சார பஸ்கள் இயக்கப்படுவது என்பது எங்களின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டையும் அது பிரதிபலிக்கிறது. எங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம், பயணிகளுக்கு வசதியான பயணத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பசுமையான பயணத்தில் தென்னிந்தியாவின் கலாச்சார மற்றும் இயற்கை பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் துவக்கப்பட்ட நியூகோ, இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது, அதன் அனைத்து மின்சார பஸ்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரங்களுக்கு இடையிலான பயணத்தை வழங்குகிறது. இவை வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்திற்கான விருப்பமான தேர்வாக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் பஸ்களாக நியூகோ பஸ்கள் விளங்குகின்றன. சிசிடிவி கண்காணிப்பு, ஓட்டுநர் மூச்சுப் பகுப்பாய்வு கருவிகள், ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வேக வரம்பு கட்டுப்பாடுகள் என பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பஸ்கள் 25 நுணுக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எந்திர மற்றும் மின் ஆய்வுகள் இரண்டையும் உள்ளடக்கியது, குறிப்பாக பாதுகாப்பான பயணத்தை விரும்பும் பெண் பயணிகளுக்கு மிகுந்த பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறது. இந்த புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், நியூகோ தொடர்ந்து மின்சார பஸ் போக்குவரத்தில் முன்னணியில் உள்ளது, சுற்றுச்சூழல் உணர்வுள்ள பயணிகளுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்குகிறது மற்றும் இந்தியாவின் பசுமையான எதிர்காலத்திற்கு சிறப்பான பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.