ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் நிதியை ஃபிரங்க்ளின் டெம்பிள்டன் அறிமுகப்படுத்துகிறது

 


ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் என்னும் அதன் ஓப்பன்-எண்டட் மல்டி கேப் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டின் அறிமுகத்தை ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் அறிவித்தது. பெரிய, மத்திய, சிறிய கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான செக்யூரிட்டி துறையில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன மதிப்புயர்வை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும்.

 பெரிய, மத்திய, சிறிய கேப் ஆகிய ஒவ்வொரு மார்க்கெட் கேப் வகையிலும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப எஃப்ஐஎம்சிஎஃப் தன் மொத்த சொத்துக்களில் 25 சதவிதம் குறைந்தபட்ச வெளிப்பாட்டைப் பராமரிக்கும். மீதமுள்ள 25 சதவிதம் உள் கட்டமைப்பின் அடிப்படையில் மிகவும் உகந்த முறையில் பிளண்ட் செய்யப்படும். இந்த புதிய ஃபண்ட் ஆஃபர் 2024 ஜூலை 8 ஆம் தேதி தொடங்கி 2024, ஜூலை 22 ஆம் தேதி முடிவடையும். இந்தக் காலகட்டத்தில் ஒரு யூனிட் ரூ.10/- க்குக் கிடைக்கும்.


ஓர் அதிகபட்ச வளர்ச்சி கொண்ட சிறு மற்றும் மத்திய கேப் யூனிவர்சையும் ஒப்பீட்டளவில் நிலையான பெரிய கேப் யூனிவர்சையும் பிளண்ட் செய்து இரு வேறு உலகங்களிலும் சிறந்ததை வழங்கும் ஒரு தயாரிப்பை அளிப்பதை ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆற்றல் மாற்றம், சேமிப்பை நிதிமயமாக்குதல், பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், டிஜிட்டல் நிறுவன இடையூறு, உற்பத்தி மறுமலர்ச்சி போன்ற துறைகளில் வாய்ப்புள்ள தீம்களை இந்த நிதி கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். இந்த நிதி அதன் பாட்டம்-அப் கியூஜிஎஸ்வி ஸ்டாக் பிக்கிங் ஃபிரேம்வொர்க்கைப் பயன்படுத்தி தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை, இந்தத் தீம்களுக்குள்ளும் துறைகளுக்குள்ளும் சரியான ஆலோசனைகளைக் கண்டறியும் மதிப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தும்.

நிதி அறிமுகத்தையும் அதன் முதலீட்டு உத்தியையும் குறித்து கருத்து தெரிவித்த எமர்ஜிங் மார்க்கெட் ஈக்விட்டி-இந்தியா, பிராங்க்ளின் டெம்பிள்டனின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜானகிராமன் ஆர், “பல்வேறு மார்க்கட் துறைகளில் வளர்ச்சியை  எட்டிப்பிடிக்கும் வகையில் எஃப்ஐஎம்சிஎஃப் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாரம்பரிய ஈக்விட்டி நிதிகளில் பெரும்பாலும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளான சிறிய மற்றும் மத்திய கேப் இடங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மார்க்கட் கேப்புக்கும் பிரத்தியேகமான பக்கெட்டுகளையும் பரந்துபட்ட பன்முகப்படுத்துதலை உறுதிசெய்ய உரிய காலத்தில் ரீ-பேலன்சிங்கையும் கொண்ட எங்கள் மல்டி கேப் ஃபண்டில் பங்கேற்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட கால நோக்கெல்லை கொண்ட முதலீட்டாளர்கள் எண்ணலாம்” என்றார்.

இந்த நிதியை அறிமுகப்படுத்திப் பேசும்போது ஃபிராங்க்ளின் டெம்பிள்டன்-இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வாலேகர், “எங்கள் புதிய மல்டி கேப் உத்தியை நாங்கள் உற்சாகத்துடன் அறிமுகப்படுத்துகிறோம். ஒரு நெகிழ்வானதும் ஒழுங்குமுறை கொண்டதுமான முதலீட்டு அணுகுமுறையின் மூலம் இந்த வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள எஃப்ஐஎம்சிஎஃப் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக்கொள்கிறது. வலிமையான பல்வகைப்படுத்தலைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form