நிதியாண்டு 24 இல் வணிக அளவில் 46 சதவிதத்துடன் ஒரு வலுவான 4 ஆண்டு சி ஏஜிஆர் வளர்ச்சிக்குப் பிறகு, மஹிந்திரா நிறுவனத்தின் ட்ரக் அண்ட் பஸ் பிரிவு ஓட்டுநர் தங்குமிடம், 24 மணி நேர பிரேக் டௌன் உதவி மற்றும் ஆட்ப்ளூ கிடைக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகின்ற அதே வேளையில் ஒரு நாளைக்கு 75 வாகனங்களுக்கு மேல் சர்விஸ் செய்யக்கூடிய 37 சர்விஸ் பே க்களை சேர்க்கின்ற வகையில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் பரவியுள்ள ஐந்து அதிநவீன டீலர்ஷிப்களை ஜூலை மாதத்தில் தொடங்கியது.
மஹிந்திரா ப்ளாசோ எக்ஸ், ஃப்யூரியோ, ஆப்டிமோ மற்றும் ஜயோ ஆகியவை சிறந்த எரிபொருள் திறன் உட்பட இரட்டை சேவை உத்தரவாதங்களை வழங்குகின்ற, இந்தியாவில் உள்ள ஒரே வணிக வாகன ட்ரக் வரம்பாகும். எம்டிபிடி 48 மணிநேரத்தில் ட்ரக்கை மீண்டும் சாலைக்கு கொண்டுவருவதன் மூலம் அதன் பிரேக்டவுன் சேவையின் செயல்பாடு நேரத்தையும் உத்தரவாதம் செய்துள்ளது, இல்லையெனில் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 1000/- ஐ செலுத்தும். கூடுதலாக, டீலர் பணிமனையில் 36 மணிநேரத்தில் வாகனம் திரும்புவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் அல்லது நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ. 3000/- செலுத்தும். தொடர்ச்சியான தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் வாடிக்கையாளர் மைய்யப்படுத்தல் ஆகியவை எம்டிபிடி இன் மையத்தில் உள்ளது, இது இந்த உத்தரவாதங்களை சாத்தியமாக்கியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் வர்த்தக வாகனங்களின் வணிகத் தலைவர் ஜலஜ் குப்தா இந்த நிகழ்வு குறித்து பேசுகையில், "எங்கள் நெட்வொர்க்கில் இந்த 5 புதிய டீலர்ஷிப்களைச் சேர்ப்பது எங்கள் எல்லையை விரிவுபடுத்த உதவும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு உதவும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு அதிக செயல்பாடு நேரத்தை வழங்குகின்ற வரவிருக்கும் வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிஎஸ்6 ஓபிடி II ரக ட்ரக்குகளுக்கு, டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு லாபத்தை அதிகரிப்பதன் மூலம் நிகரற்ற மதிப்பை உறுதியளிக்கின்ற புதிய மைலேஜ் உத்தரவாதமான "ஜியாடா மைலேஜ் நஹிந்தோ டிரக் வாபாஸ்" ஐ அறிமுகப்படுத்தினார். இந்த அதிநவீன 3எஸ் வசதிகள் வலுவான டீலர் கூட்டாளர்களுடன் இணைந்து உயர் வாடிக்கையாளர் சேவை தரங்களை அமைக்கும் மற்றும் எம்டிபி வணிகத்தை விரிவுபடுத்தும்” என்றார்.