ரோக்கரேஜ் ஃபார் லைஃப்' என்ற முன்னெடுப்பு மூலம் புரோக்கிங் துறையில் அலைகளை உருவாக்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்கனவே லாபத்தை அடைந்துள்ள இந்த செயலி, குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. 2022 இல் அது தொடங்கியதிலிருந்து, எம் டாட் ஸ்டாக் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சிறந்த ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவத்திற்கு வழிவகுக்கின்றன.
நிறுவனம் அதன் உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டே ஆண்டுகளில் சிறந்த16 வது ஸ்டாக்புரோக்கர் என மதிப்பீடு செய்யும் நிலைக்கு உயர்ந்தது. 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட சந்தைப் பங்கேற்பாளர்களிடமிருந்து ஏராளமான ஆதரவையும், மேலும் 21 லட்சத்துக்கும் அதிகமான தினசரி வர்த்தக அளவுகளையும் திரட்டியுள்ளது. அதன் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து, எம் டாட் ஸ்டாக் புதுமையான தீர்வுகளுடன் டிரேடிங் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தவும், இந்தியாவில் முழு அளவிலான நிதிச் சேவை வழங்குநராக மாறவும் உறுதிபூண்டுள்ளது.
இந்த மைல்கல்லை அடைந்த இந்தத் தருணத்தில், மிரே அசெட் ஆல் நிர்வகிக்கப்படும் எம் டாட் ஸ்டாக்-இன் சிஈஓ ஆன ஜிசாங் யூ பேசுகையில், “மிரே அசெட்- ஆல் நிர்வகிக்கப்படும் எம் டாட் ஸ்டாக்- இன் இரண்டாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், எங்கள் குழு அர்ப்பணிப்புடன் மேலும் தொடர்ந்து வளர்ச்சியடையும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன். எம்.ஸ்டாக் குழு முதலீட்டாளர்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் நிலையான இயங்குதளங்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் புதுமைகளில் கவனம் செலுத்தும்” என்றார்.
மிரே அசெட்- ஆல் நிர்வகிக்கப்படும் எம் டாட் ஸ்டாக்-இன் இயக்குனர் மற்றும் சிபிஓ அருண் சௌத்ரி கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளில், வாடிக்கையாளர்களுக்கு வேகமான, நிலையான மற்றும் பாதுகாப்பான இயங்குதளத்தை வழங்கும் எங்கள் உறுதிப்பாடு உண்மையாகாவே நிகழ்ந்துள்ளது. எங்கள் தயாரிப்பான எம்டிஎஃப் (இமார்ஜின்) மகத்தான வெற்றியடைந்த பிறகு, மட்டப்படுத்தப்படாத ஹோல்டிங் பீரியட் போன்ற தனித்துவமான அம்சத்துடன், ஆண்டுக்கு 11.99 சதவிதம் என்ற ஒப்பிடக்கூடிய விகிதத்தில் மார்ஜின் பிளெட்ஜ் வசதியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் இரண்டாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், டிரேடிங்கை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதுமையான அம்சங்களைக் கொண்ட எம் டாட் ஸ்டாக்- இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எம் டாட் ஸ்டாக் அதிவேக வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதை நான் நம்பிக்கையுடன் கூற முடியும். மேலும் கூடிய விரைவில் சிறந்த 10 ஸ்டாக் புரோக்கர்களில் ஒருவராக உருவாவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.